இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்: நிலைநிறுத்தப்படும் சிஎம்எஸ்-1 செற்கைகோள்!

|

தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ, அதிநவீன சிஎம்எஸ்-1 செயற்கை கோளை பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த செயற்கைகோள்

தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த செயற்கைகோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை 41 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இதில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட்-12 செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. இதை சரிசெய்ய அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-1 செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் ஏவப்பட உள்ளது.

பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் செயற்கைகோள்

பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் செயற்கைகோள்

சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து அதற்கான கவுன்டவுன் நேற்று தொடங்கப்பட்டது.

7 ஆண்டுகள் ஆயுட்காலம்

7 ஆண்டுகள் ஆயுட்காலம்

சுமார் 7 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட சிஎம்எஸ்-1 செயற்கைகோள் 1400 கிலோ எடை கொண்டது. பேரிடர் கண்காணிப்பு, இணையவழிக் கல்வி, தொலை மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு இது பயன்படும் என கூறப்பட்டுள்ளது.

சதீஷ்தவான் மையத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்

சதீஷ்தவான் மையத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்

இஸ்ரோ வடிவமைத்துள்ள சிஎம்எஸ்-1 செயற்கைகோள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

Best Mobiles in India

English summary
PSLV C-50 Mission: ISRO Launching CMS-01 Communication Satellite Today at 3.41 PM

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X