SIM கார்டு மற்றும் OTT-ல் போலி அடையாளமா? அப்போ, 1 வருட சிறை தண்டனை.! ரூ.50,000 அபராதம்.!

|

கடந்த சில ஆண்டுகளாக, போலி ஆவணங்கள் மூலம் சிம் (SIM) கார்டு பெறுவது, அதை வைத்து போலி அடையாளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றுவது, பெண்களிடம் சில்மிஷம் செய்வது என்று பல வேலைகளை அடையாளம் தெரியாமல் செய்து வந்த மோசடிகாரர்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மோசக்காரர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களாகிய நமக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

சிம் கார்டு அல்லது OTT-களில் போலி அடையாளமா? சிறை தண்டனைக்கு வாய்ப்பு.!

சிம் கார்டு அல்லது OTT-களில் போலி அடையாளமா? சிறை தண்டனைக்கு வாய்ப்பு.!

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, சிம் கார்டு வாங்கி, அவர்களுடைய உண்மையான அடையாளத்தை மறைக்கும் நபர்கள் மீது இனி சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிம் கார்டு மற்றும் OTT தளங்களில் போலி அடையாளங்களுடன் பயன்படுத்தும் பயனர்கள் மீதும், இந்த சட்டத்தின் பெயரில், 1 ஆண்டுக் கால சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகளால் இந்தியாவில் ஏராளமான மோசடி.!

சைபர் குற்றவாளிகளால் இந்தியாவில் ஏராளமான மோசடி.!

போலி சிம் கார்டுகளுடன், சைபர் குற்றவாளிகளால் ஏராளமான மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. மேலும், போலியான அடையாளங்களுடன் OTT இயங்குதளத்திற்குள் நுழைகிறார்கள். இதுபோன்ற, ஆன்லைன் மோசடி நடவடிக்கைகள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புத் துறை (DoT) இவற்றைச் சமாளிக்க புதிய வழியைக் கொண்டு வந்துள்ளது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!

இனி போலி அடையாளங்களை பிரதிபலித்தால் ரூ.50,000 அபாரதமா?

இனி போலி அடையாளங்களை பிரதிபலித்தால் ரூ.50,000 அபாரதமா?

புதிய சிம் கார்டைப் பெறும்போது அல்லது OTT இயங்குதளங்களில் தவறாகப் பிரதிபலிக்கும் போது போலி அடையாளங்களை உள்ளிடுவது, போலி வாட்ஸ்அப் கணக்கு மூலம் அடுத்தவர்களை ஏமாற்றுவது, சிக்னல் ஆப்ஸ், டெலிகிராம் ஆப்ஸ் போன்ற பயன்பாடுகளில் அடையாளத்தைப் போலியாக உருவாக்குவது போன்ற செயல்களை இனி DoT குற்றமாகக் கருதும் என்று தெரிவித்துள்ளது. இப்படி செய்யும் பயனருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

யார் அழைக்கிறார்கள் என்பதை கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.!

யார் அழைக்கிறார்கள் என்பதை கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.!

அல்லது இந்த இரண்டும் சேர்த்து வழங்கப்பட்டு அந்த நபர் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆன்லைன் நடவடிக்கைகளில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்காகத் தொலைத்தொடர்புத் துறை (DoT) தொலைத்தொடர்பு மசோதாவின் சமீபத்திய வரைவில் இந்த விதிகளை வைத்துள்ளது. மசோதாவின் அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, எல்லா டெலிகாம் பயனர்களும் யார் அழைக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

சிம் கார்டு மற்றும் OTT சேவைக்கு இனி KYC சமர்ப்பிக்க வேண்டுமா?

சிம் கார்டு மற்றும் OTT சேவைக்கு இனி KYC சமர்ப்பிக்க வேண்டுமா?

தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் இணைய மோசடிகளைத் தடுக்க உதவும். எனவே, அடையாளம் தொடர்பான விதிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு மசோதாவின் பிரிவு 4 இன் கீழ் துணைப் பிரிவு 7 படி, தொலைத்தொடர்பு பயனர்கள் தங்கள் அடையாளத்தை அறிவிக்க வேண்டும். இதன் பொருள் அனைத்து சிம் கார்டு வைத்திருப்பவர்களும் KYC தகவலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இனி சிம் கார்டுகளின் போலி அடையாளங்களை யாரும் உருவாக்க முடியாதா?

இனி சிம் கார்டுகளின் போலி அடையாளங்களை யாரும் உருவாக்க முடியாதா?

இதன் மூலம், சிம் கார்டுகளின் போலி அடையாளங்களை யாரும் உருவாக்க முடியாது. பெரியளவு சைபர் குற்றங்கள் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது. எந்தவொரு பயனரும் தங்கள் அடையாளத்தைத் தவறாகச் சித்தரித்தால், அவர்கள் ஒரு வருடம் வரை சிறைக்கு அனுப்பப்படலாம், அல்லது ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்களுடைய தொலைத்தொடர்பு சேவைகள் நிறுத்தப்படலாம் அல்லது இவற்றில் அனைத்தும் சேர்த்துத் தண்டிக்கப்படலாம்.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

இந்த குற்றத்தை செய்தால் கைது செய்ய வாரண்ட் தேவையில்லையா?

இந்த குற்றத்தை செய்தால் கைது செய்ய வாரண்ட் தேவையில்லையா?

இந்த வகையான மோசடிகள் ஒரு அறியக்கூடிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது, போலீஸ் அதிகாரிகள் அந்த நபரைக் கைது செய்ய எந்தவொரு வாரண்ட்டும் இல்லாமல் அவர்களை நேரடியாகக் கைது செய்யலாம் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணையைத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், OTT இயங்குதளங்களில் கூட பயனர்கள் உள்நுழைவதற்கு முன் KYC விபரங்களை இனி சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம் கார்டு அல்லது OTT -களில் போலி அடையாளங்களை உருவாக்காதீர்கள்.!

சிம் கார்டு அல்லது OTT -களில் போலி அடையாளங்களை உருவாக்காதீர்கள்.!

இந்தியாவின் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், சாதாரண குரல் அழைப்பு, வாட்ஸ்அப் அழைப்பு, ஃபேஸ்டைம் அல்லது வேறு ஏதேனும் OTT அழைப்பு போன்று எந்த சேவையாக இருந்தாலும் அழைப்பவரின் விபரங்கள் காண்பிக்கப்பட்ட வேண்டும். இதைச் சரியாகச் செய்ய அனைவரும் KYC விபரங்களைச் சரியாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆன்லைன் மற்றும் அழைப்பு மூலம் ஏற்படும் மோசடிகள் வெகுவாக குறையும். மக்கள் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி சிம் கார்டு அல்லது OTT -களில் போலி அடையாளங்களை உருவாக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Providing Fake Identity For SIM or OTT Registration Will Be Arrested Or Fined Rs 50k

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X