பொதுதேர்தல்: மை விரலுடன் கூடிய செல்பீ பரிசுப்போட்டி.! முதல் பரிசு ரூ.7,000: புதுசா இருக்கே.!

வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு, 7,000-ஆகவும், இரண்டாவது மற்றும் மூன்றவது பரிசாக ரூ.3000 ஆகவும் பரிசுதொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.

|

இந்தியாவில் 91நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை முதல் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்சமயம் 20மாநிலங்களின் மக்களவை தேர்தலுக்கான பரப்புரை
முடிவடைந்துவிட்டது.

பொதுதேர்தல்: மை விரலுடன் கூடிய செல்பீ பரிசுப்போட்டி.!  புதுசா இருக்கே.

இந்நிலையில் மிசோரம் மாநிலத்திற்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்கு சதவீதத்தினை உயர்த்த அம்மாநில தேர்தல் ஆணையம் புதுவிதமான யுக்தி ஒன்றை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக இம்மாநிலத்தில்
மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 7,23,633-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிசோரம்

மிசோரம்

மேலும் இந்த மிசோரம் மாநிலத்தில் கடந்த மக்களவை பொதுத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பதிவான நிலையில் இம்முறை வாக்கு சதவிகிதத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு யுக்திகளையும் விழிப்புணர்வுகளையும் தேர்தல்
ஆணையம் மேற்கொண்டுவந்தது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தற்சமயம் மிசோரம் மாநில மக்கள் மற்றும் இளம் வாக்களர்களை ஈர்க்கும் வகையில் செல்பீ பரிசுப்போட்டி ஒன்றை அம்மாநில தேர்தல் ஆணையத் டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது, அதில் மிசோரம்
மாநிலத்தில் நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்கு செலுத்தப்பவர் குழுவாகவோ, தனியாகவோ
இந்த போட்டியில் பங்கேற்கலாம்,அதற்கான சில விதிகளையும் அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

செல்பீ படம்

செல்பீ படம்

குறிப்பாக வாக்கு செலுத்துவதற்கு முன்பு, அதாவது வாக்கும் செலுத்தும் போது வரிசையில் நிற்பது போன் ஒரு செல்பீ படம், வாக்கு செலுத்திய பிறகு மை வைத்த விரலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு செல்பீ படம், நல்ல வாசகம் அடங்கிய தலைப்பின் கீட் அந்த புகைப்படங்களை #MizoramVotes என்ற ஹாஸ்டேக் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுப்பவேண்டும். பின்பு 9089329312 என்ற தொலைபேசியின் வாட்ஸ்ஆப் எண்ணிலும் அந்த புகைப்படத்தை நாளை மாலை 7மணி வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முதல் பரிசு,ரூ.7,000

முதல் பரிசு,ரூ.7,000

வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு,ரூ.7,000-ஆகவும், இரண்டாவது மற்றும் மூன்றவது பரிசாக ரூ.3000 ஆகவும் பரிசுதொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் வெற்றிபெறுவோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் புதுமையான பரிசுபோட்டியை அறிவித்தால்
மக்களிடையே ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

Best Mobiles in India

English summary
Proud of your vote Click selfie win prizes says Mizoram CEO: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X