வெளிநாட்டில் இருந்து கருவிகளை வாங்கலாமா?

Posted By:

வெளிநாட்டில் இருந்து போன், லாப்டாப், ப்ரோஜெக்டர் போன்ற கருவிகளை வாங்குவது குறித்த பல கருத்துகள் புழக்கத்தில் இருக்கின்றன.

சிலர் வெளிநாட்டு பொருட்களை வாங்கலாம் என்றும், சிலர் வாங்க கூடாது என்றும் கூறிகின்றனர்.

உண்மையில் வெளிநாட்டில் இருந்து கருவிகளை வாங்கலாமா அல்லது வாங்க கூடாதா என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

ஐபோன்களின் விலை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் என்பதோடு வெளிநாட்டில் வாங்கிய ஐபோன்களுக்கு வாரன்டி வழங்கப்படாது. முடிந்த வரை ஐபோன்களை உள் நாட்டில் வாங்குவது நல்லது.

ஐபேட்

ஐபேட்

ஐபேட்களை பொருத்த வரை சர்வதேச வாரன்டி வழங்கப்படுவதால், சரியான முகவரிடம் இருந்து வாங்கும் பட்சத்தில் வாரன்டியை பயன்படுத்தி கொள்ளலாம்.

டெல் எக்ஸ்பிஎஸ் 13 லாப்டாப்

டெல் எக்ஸ்பிஎஸ் 13 லாப்டாப்

இந்தியாவில் ரூ.1,28,990க்கு விற்பனை செய்யப்படும் இந்த லாப்டாப் அமெரிக்காவில் வாங்கலாம், ஆனால் அவ்வாறு செய்யும் போது அதன் வாரன்டி இங்கு செல்லாது. ஒரு வேலை வாரன்டியை பயன்படுத்தி கொள்ள அமெரிக்காவிற்கு லாப்டாப்பை அனுப்ப வேண்டும்.

சோனி RX 100 மார்க் 3 மற்றும் நிகான் D610

சோனி RX 100 மார்க் 3 மற்றும் நிகான் D610

அமெரிக்காவில் இந்த கேமராக்களின் இந்திய விலை ரூ.50,000, ஆனால் இந்தியாவில் இரண்டு ஆண்டு வாரன்டியோடு ரூ.52,990 ஆகும். இந்த கருவிகளை பொருத்த வரை இந்தியாவில் வாங்குவது சிறந்தாக இருக்கும்.

எப்சன், பானாசோனிக், பென்க்யூ ப்ரோஜெக்டர்

எப்சன், பானாசோனிக், பென்க்யூ ப்ரோஜெக்டர்

எப்பவும் ப்ரோஜெக்டர்களை வெளிநாடுகளில் இருந்து எடுத்து வருவது சிரமமான விஷயம் ஆகும். இதன் எடை மற்றும் அளவு அதிக வரியை செலுத்த வழிவகுக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Pros and cons of buying a gadget from abroad
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot