டைம் டிராவல் ஆதாரம் : 2028 ஆண்டிலிருந்து வந்த மனிதன்.!
"முதலாவதாக, 2003ஆம் ஆண்டே டைம் டிராவல் என்பது சாத்தியமானது. ஆனால் அது அதி இரகசிய நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பாராநார்மல் எலைட் என்ற யூடியூப் சேனலில் நோவா என்பவர் வெளியிட்ட வீடியோவில், தான் தனது வாழ்க்கையை பணயம் வைத்து வருங்கால தொழில்நுட்பம் பற்றி மக்களை எச்சரிக்கை செய்ய டைம் டிராவல் செய்து பின்னோக்கி வந்ததாக கூறுகிறார்.

டைம் டிராவலர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அவர் பேசுகையில், "நான் யாரையும் ஏமாற்ற முயற்சிக்கவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் டைம் டிராவல் இருக்கிறது என்பதை நிரூபிப்பது மற்றும் நான் ஒரு டைம் டிராவலர்" என்கிறார்.

நோவா
"முதலாவதாக, 2003ஆம் ஆண்டே டைம் டிராவல் என்பது சாத்தியமானது. ஆனால் அது அதி இரகசிய நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டைம் டிராவல் செய்ய முடியும் என்ற இரகசியம் 2028 வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படாது" என்கிறார் நோவா. மேலும் இவர் பல ஆண்டுகள் டைம் டிராவல் செய்து வந்ததால், பசியின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் கூறுகிறார்.

டைம் டிராவல்
தனது வயது 50 என்று அழுத்தி கூறும் இவர், மீண்டும் இளமையை திரும்ப கொண்டுவருவதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
2028 ல் டைம் டிராவல் உண்மையாகவே உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளும் நிறுவனங்கள், பொதுமக்கள் அதை பயன்படுத்த அனுமதிக்கும் என்கிறார். 2021ல் கூகுள் க்ளாஸ் போன்ற மிகவும் பிரபலமான கருவி ஒன்று இருக்கும் என்றும், அது பார்ப்பதற்கு சாதாரண கண் கண்ணாடி ஜோடி போல இருந்தாலும், இன்றைக்கு உள்ள கணிணிகள் போன்ற திறனுடன் செயல்படும் என மேலும் தெரிவிக்கிறார்.

2020 தேர்தலுக்கு பிறகு
"ஆனால் பிரச்சனை என்னவென்றால் 2020 தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இருப்பார். இதை 100% என்னால் உறுதியாக கூறமுடியும். உங்களில் பலர் என்னை நம்ப மாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும், ஆனால் நான் கூறுவது அனைத்தும் உண்மை" என கூறுகிறார் நோவா.
இது போன்ற அதிசய நிகழ்வுகளை ஆராயும் பாராநார்மல் இன்வெஸ்டிகேசன், 2017ல் இவரது வாழ்க்கையை சரிசெய்துகொள்ள உதவியாக 700டாலர் அனுப்பி வைத்தது.

ஜான் கிரிப்
"இவ்வளவு நேரம் நான் கூறுவதை கேட்டதற்கு நன்றி, உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என தெரிவித்து வீடியோவை முடித்தார் நோவா.
அதேநேரம் சசெஸ் பல்கலைகழகத்திற்காக வான்இயற்பியலாளர் ஜான் கிரிப்பின் மற்றும் அவரது மனைவி மேரி கிரிப்பின் இருவரும் எழுதிய ஆவணத்தில், "டைம் டிராவலை தடுக்கக்கூடிய சட்டவிதிகள் எதுவும் இயற்பியலில் இல்லை" என கூறுகின்றனர். இதை நிகழ்த்தி காண்பிப்பது மிக மிக கடினமாக இருக்கும். ஆனால் இது அசாத்தியமானது இல்லை.
கிரிப்பின் தம்பதிகள் நடத்திய ஆய்வில் டைம் டிராவல் செய்வதற்கு 2 விசயங்கள் தேவை என குறிப்பிடுகின்றனர். அது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியலுக்கான பொது தத்துவம் மற்றும் கருந்துளைகள் பற்றிய புரிதல்.
இந்த கருந்துளைகள் என்ற மிக முக்கிய பொருளின் வாயிலாக தான் டைம் டிராவல் சாத்தியமாகும் என்கிறது அந்த கட்டுரை.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன் தத்துவம் என்பது இடம் மற்றும் நேரத்திற்கான தத்துவமாக இருப்பதால், கருந்துளைகள் மூலம் இடத்தின் வாயிலாக பயணிப்பது மட்டுமின்றி காலத்தின் வாயிலாகவும் பயணிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
கருந்துளைகளை சுற்றியுள்ள நேரம் மற்றும் இடத்திற்கு இடையேயான வேறுபாடு என்பது பிரித்தறிய முடியாமல் மர்மமாக இருப்பதால், அது தான் டைம் டிராவலுக்கான திறவுகோலாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஈர்ப்புவிசை
எனினும் இதை தணிப்பதற்கான பல்வேறு காரணிகள் உள்ளன. முக்கிய பிரச்சனை என்னவென்றால், கருந்துளை அதனுடைய ஈர்ப்புவிசையால் அதன் அருகில் வரும் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்கிறது. அது எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் கூட. அது தான் தனித்தன்மை எனப்படுகிறது.
எனினும்,கருந்துளை என்ற ஒன்று இருந்தால், அது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான சாளரமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications