ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.!

|

ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.

ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது

ஆனால் பலரது மனங்களையும் நியூசிலாந்து அணியே வென்றதாக கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல உலகின் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களும் இதையே சொல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இளம்பெண் ஒருவர் விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்குள் ஒடமுயன்றார்.

பின்பு அதைக் கவனித்த காவலர்கள் அந்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, விட்டாலி அன்சென்சார்டு இணையதளம் நடத்திவருபரின் ஸ்டோரோவெட்ஸ்கியின் தாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது மகளின் இணையதளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர் மைதானத்தில் ஓட முயன்றுள்ளார், அதற்குள் காவலர்கள் அவரை தூக்கி வெளியேற்றிவிட்டனர். இந்த தகவலை ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேபோன்று கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த, அந்த இணையதளத்தின் பெயர் பொதிக்கப்பட்ட நீச்சல் உடையுடன் பெண் ஒருவர் மைதானத்தில் ஓடினார். இது அந்த இணையதளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
promote-pornographic-website-lady-arrest : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X