இது ஓகே-வா?- உங்க முகத்தை காட்டினா ரூ.1.5 கோடி சம்பளம்: அதிரடி வேலை வாய்ப்பு: எப்படி அப்ளை செய்வது?

|

முகத்தை காட்டினால் இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி ஊதியம் வழங்குகிறார்களா என்ற சந்தேகம் வரலாம். இது தங்களை போன்ற முகம் மற்றும் குரலைக் கொண்டு ரோபோவை உருவாக்குவதற்கான உரிமைக்கோரல் ஆகும். ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப் ஆன ப்ரோமோபோட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் ரோபோவின் முகத்தை ஒருசார் எதார்த்தமாக இல்லாமல் ஒரிஜினலாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. மனிதர்களை போன்றே பிரதிபலிக்கும் முகம் மற்றும் குரல் உடன் ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ரோபோடிக்ஸ் நிறுவனம் $200,000 அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.1.5 கோடி செலுத்துவதாக அறிவித்துள்ளது.

ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப்

ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப்

ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப் ஆனது ப்ரோமோபாட்டின் தகவலின்படி, மனித உருவ ரோபோக்கள் பல சூழல்களில் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். வடஅமெரிக்கா மற்றும் மத்திய கிழக்க நாடுகளில் உள்ள மால்கள், விமான நிலையங்கள் உட்பட பிற பொது இடங்களுக்கு ப்ரோமோபாட்-ன் ரோபோ-சி ரோபோக்களை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்க நிறுவனத்திற்கு மனித உருவ முகம் மற்றும் குரல் கொண்ட அதே மாதிரியான ரோபோக்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. ரோபோ-சி அதன் வி.4 சாதனத்தின் பாரம்பரிய ரோபோ தோற்றத்துடன் ஒப்பிடும் போது மனித முகத்தை கொண்டிருக்கிறது.

மனித முகங்களை கொண்ட ரோபோக்கள்

மனித முகங்களை கொண்ட ரோபோக்கள்

மனித முகங்களை கொண்ட ரோபோக்களை வடிவமைக்க ப்ரோமோபாட் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக ரோபோக்களின் முகங்கள் கணினிகள் மூலமாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் ப்ரோமோபாட் மனிதர்களின் முகங்களை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. தங்கள் முகத்தை நிறுவனத்திடம் காட்டும் பட்சத்தில் அதே முகத்தில் ரோபோக்கள் தயாரிக்க நிறுவனம் உரிமைக் கோருகிறது.

வயது, பாலினம் மற்றும் இனம்

வயது, பாலினம் மற்றும் இனம்

ப்ரோமோபாட் நிறுவனம் வயது, பாலினம் மற்றும் இனம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அதேபோல் வடிவமைப்பில் ரோபோவை கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதேபோல் உங்களின் முகம் மற்றும் வடிவமைப்புக்கு உரிமைக் கோரல் தொகையாக இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடி தர நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. உரிமைக்கோரலுக்கும் நிறுவனம் ஒரு விதிமுறைகளை விதித்துள்ளது அதாவது 25 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் இணையதளத்தில் மூலம் இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த பணிக்கு நட்பான, கனிவான மற்றும் அன்பான தோற்றம் இருக்கும் 25-க்கு மேற்பட்ட யாவரும் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தின் மூலம் விண்ணப்பம்

இணையதளத்தின் மூலம் விண்ணப்பம்

25 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் தேர்ந்தெடுக்கும் நபரின் முகம் மற்றும் உடலின் 3டி மாதிரியை உருவாக்கும், ப்ரோமோபாட்டின் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து கட்டளையும் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் 100 மணிநேர பேச்சுக்கு மேல் பதிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் தோற்றம் மற்றும் குரலின் அடிப்படையில் ரோபோ 2023-ல் தோன்றத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாக தயாரித்து வரும் நிறுவனம்

தீவிரமாக தயாரித்து வரும் நிறுவனம்

2019 ஆம் ஆண்டில் இருந்து மனித உருவ ரோபோக்களை தீவிரமாக தயாரித்து சந்தைக்கு வழங்கி வருகிறது. எங்களது புதிய வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தொடங்க விரும்புகிறார்கள். மேலும் சட்டரீதியான தாமதங்களை தவிர்க்க புதிய ரோபோ தோற்றத்திற்கு உரிமம் பெற வேண்டும் என ப்ரோமோபாட் தெரிவித்துள்ளது. ஒருவரின் முகத்திற்கு உரிமை கோரும் பட்சத்தில் நிறுவனம் அவர்களுக்கு $200,000 செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 மில்லியன் டாலர் கேட்டு வழக்கு

10 மில்லியன் டாலர் கேட்டு வழக்கு

சட்டப்பூர்வ லைசென்ஸிங் பெற காரணம் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் உருவ ரோபோக்களை அவரின் அனுமதி பெறாமலேயே தயாரித்ததற்கு அவர்களிடம் 10 மில்லியன் டாலர் கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே நிறுவனம் தற்போது இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மனித உருவிலான ரோபோக்கள் என்பது சிக்கலான மற்றும் கடினமான செயலாகும், பல நிறுவனங்கள் இந்த நடவடிக்கைக்கு முயற்சி செய்து வருகிறது. தற்போது ப்ரோமோபாட் நிறுவனம் முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Promobot Offers: Get $200,000 if you show your face to create robots

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X