Home
News

மிலிட்ரி கிரேட் தரம்.. இந்தியாவின் மிகப்பெரிய டிஸ்பிளே வாட்ச்.. புரட்சிகரமான டிசைன்.. முரட்டு பசங்களுக்கானது..

புரட்சிகரமான ஒரு புது ஸ்மார்ட் வாட்சை வாங்க பிளான் செய்கிறீர்களா? முரட்டுத்தனமான லுக்கில்.. மிலிட்டரி கிரேட் தரத்தில், கம்மி விலையில் ஒரு புது ஸ்மார்ட்வாட்ச் வாங்கலாம் என்று சொன்னால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய மாடல் ப்ரோமேட் எக்ஸ்வாட்ச் எஸ்-19 மாடலாகும்.

ப்ரோமேட் (Promate) நிறுவனம் அதன் ஸ்மார்ட் வாட்ச் (smartwatch) வரிசையில் ப்ரோமேட் எக்ஸ் வாட்ச்-எஸ்19 (Promate XWatch-S19) என்ற மாடலை இந்தியா ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 1.95' இன்ச் அளவு கொண்ட எட்ஜ்-டு-எட்ஜ் (edge-to-edge) செமி கர்வுடு TFT வளைந்த டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

மிலிட்ரி கிரேட் தரம்.. இந்தியாவின் மிகப்பெரிய டிஸ்பிளே வாட்ச்..

ப்ரோமேட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது இந்தியாவில் கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்களில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய டிஸ்பிளே - பாடி விகிதத்தைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Promate XWatch-S19 ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இப்போது இந்தியாவில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இது ஒரு மிலிட்டரி பிளாக் (black) மற்றும் மிலிட்டரி க்ரீன் (Military Green) நிறத்தில் வாங்க கிடைக்கிறது.

இந்த முரட்டுத்தனமான ஸ்மார்ட் வாட்ச் (Rugged smartwatch) விலை ரூ.3,999 மட்டுமே என்று நிறுவனம் கூறியுள்ளது. இது தற்போது அமேசான் (Amazon) இந்தியா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. குறிப்பாக, இந்த ப்ரோமேட் எக்ஸ் வாட்ச் எஸ் 19 சாதனம் பல இராணுவ தர (Military grade smartwatch) சோதனைகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் வாட்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 முதல் 12 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி (Battery) ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Promate XWatch-S19 பலருக்கு சரியான துணையாக இருக்கும். இந்த ப்ரோமேட் எக்ஸ் வாட்ச் எஸ் 19 ஆனது தொழில்துறையின் முதல் 1.95' இன்ச் கொண்ட TFT ட்ரூலி பிக் டிஸ்ப்ளேவை (TFT truely big display) கொண்டுள்ளது.

இது 500 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 240 X 282 பிக்சல் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு தெளிவான மற்றும் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது. Promate Xwatch S-19 வெறும் 40 கிராம் எடையுடையது மற்றும் உறுதியான அமைப்பை கொண்டுள்ளது. முரட்டுத்தனமான வேலைகளை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்டது.

மிலிட்ரி கிரேட் தரம்.. இந்தியாவின் மிகப்பெரிய டிஸ்பிளே வாட்ச்..

இது தினசரி அவுட்டோர் பயன்பாட்டிற்கு ஏற்றது. இது பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. இது உடற்பயிற்சி அம்சங்களுடன் பொருத்தப்பட்ட XWatch-S19 நிகழ்நேர இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் (sports mode) முறைகளை ஆதரிக்கிறது.

இது தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் விரிவான உடல்நல அறிக்கைகளைப் பயனருக்கு வழங்குகிறது. இதன் மூலம், ஸ்மார்ட்வாட்ச்சின் ஆரோக்கிய பயன்பாட்டான XWatch ஆப்ஸை பயன்படுத்தி பயனர்கள் விரிவான தரவுப் பதிவு மற்றும் கண்காணிப்பை அணுகலாம். Promate XWatch-S19 சாதனம் புளூடூத் 5.1 (bluetooth 5.1) தொழில்நுட்பதுடன் வருகிறது. இது பயணத்தின் போது தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது.

இது ஹேண்ட்ஸ்-ஃப்ரீ புளூடூத் வாய்ஸ் காலிங் அழைப்பு (hands free bluetooth calling feature) அம்சம் போன்றவற்றை ஆதரிக்கிறது. ஆண்ட்ராய்டு (android) மற்றும் iOS சாதனங்கள் இரண்டிலும் சிரமமின்றி இணக்கமானது. இது பயனர்கள் தங்கள் மணிக்கட்டில் இருந்து நேரடியாக நோட்டிபிகேஷன், வாய்ஸ் கால்ஸ் மற்றும் மெசேஜ்களை அணுக அனுமதிக்கிறது.இது இரண்டு வயர்லெஸ் சார்ஜர்கள் உடன் வருகிறது. நீங்கள் ஒரு முரட்டு காளை என்றால், உங்களிடம் இருக்க வேண்டிய ஸ்மார்ட் வாட்ச் இது தான் பாய்ஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Promate XWatch-S19 Smartwatch With Big 1.95 Display Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X