பெரிய டிஸ்பிளே.. 200 ஸ்போர்ட்ஸ் மோட்.. 7 நாள் பேட்டரி.. கம்மி விலையில் தாறுமாறா Promate XWatch-B2 வாட்ச்..
புகழ்பெற்ற எலெக்டாரிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ப்ரோமேட் (Promate) தனது வியரபில்ஸ் (Wearables) பட்டியலில் புதிய வரவு ஒன்றை இணைத்துள்ளது. அது தான் 2.01 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் எக்கச்சக்க ஹெல்த் (Health) மற்றும் ஃபிட்னஸ் (Fitness) அம்சம் கொண்ட எக்ஸ்வாட்ச்-பி2 ஸ்மார்ட் வாட்ச் (XWatch-B2 Smartwatch).
இது 12 மாத வாரண்டியுடன் ப்ளூ (Blue), ப்ளாக் (Black) மற்றும் க்ராஃபைட் (Graphite) என்று மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட் வாட்ச் அமேசான் தளத்தில் ரூ. 2499க்கு பிரத்தியேகமாக விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் டிஸ்ப்ளே 240 x 296 பிக்ஷல் ரெசொல்யூஷன் (Pixel Resolution) மற்றும் 500 நிட்ஸ் (Nits) பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) கொண்டுள்ளது.

மிகவும் அகலமான திரை அம்சம் கொண்டுள்ளதால் ஸ்க்ரீனை நாவிகேட் (Screen Nagivation) செய்வது மிகவும் எளிதாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும், திரை பெரிதாக இருப்பதால் இருக்கும் தகவல்களை சிரமப்படாமல் துள்ளியமாக பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதில் 200க்கு மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள் (Watch Faces) இருப்பதால் நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறும் உங்கள் மனநிலைக்கு ஏற்வாறும் வாட்ச் ஃபேஸை மாற்றிகொண்டு அசத்தலாம்.
வெளிபுற டிசைன் மற்றும் அம்சத்தைக் கொண்டு அசத்தியத்தைப் போலவே ப்ரோமேட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச்சின் ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் அம்சங்களிலும் அக்கரை காட்டி அசத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த ப்ரோமேட் எக்ஸ்வாட்ச்-பி2 ஸ்மார்ட் வாட்ச்சில் ஆக்டிவ்லைஃப்டிஎம் (ActiveLifeTM) ஹெல்த் சூட் (Health Suite) அம்சம் உள்ளது.
பல்வேறு ஹெல்த் சென்சார்கள், பில்ட்-இன் பெடோமீட்டர் (Built-in Pedometer), டைனமிக் ஹார்ட் ரேட் (Dynamic Heart Rate), ரத்த ஆக்ஸிஜன் அளவு, ஸ்லீப் பாட்டர்ன் (Sleep Pattern) ஆகியவற்றை கண்காணிக்கும் சென்சார்கள் இந்த ஆக்டிவ்லைஃப்டிஎம் ஹெல்த் சூட்டில் அடக்கம். இதன் மூலம் நமது உடலின் முக்கியமான செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவது மிகவும் சிறந்த அம்சம் என்றே கூறலாம்.
இதுமட்டுமின்றி சுமார் 123க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) இந்த ஸ்மார்ட் வாட்சில் இடம்பெற்றுள்ளது. பலரும் ஸ்மார்ட் வாட்ச் வாங்க முற்படுவது இந்த ஆக்டிவிட்டி ட்ராக்கின் (Activity Tracking) அம்சத்திற்காகத் தான். இதன் மூலம் உடலின் செயல்பாடுகள் மீது ஒரு கண் எப்போதும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு பல்வேறு ஹெல்த் சென்சார்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களையும் ஒரே ஸ்மார்ட் வாட்சில் கொண்டுவந்து தரமான சம்பவத்தை ப்ரோமேட் நிகழ்த்தியுள்ளது. இன்று பல பட்ஜெட் ஸ்மார்ட் வாட்களில் இல்லாத ஒரு அம்சம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance). ஸ்மார்ட் வாட்சில் அடிப்படை வாட்டர் ரெசிஸ்டண்ஸ் அம்சம் இருக்கவேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பதுண்டு.
அந்த எதிர்பார்ப்பை ப்ரொமோட் பூர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம். இந்த எக்ஸ்வாட்ச்-பி2 ஸ்மார்ட் வாட்ச் IP67 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் வருகிறது. இதன் மூலம் தவறுதலாக வாட்சில் தண்ணீர் பட்டலோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போது வியர்வையில் நனைந்தாலோ இது சேதமடையாது. வாட்டர் ரெசிஸ்டென்ஸ் போலவே டஸ்ட் ரெசிஸ்டென்சுடன் (Dust Resistance) உடன் வருகிறது.
ரோபஸ்ட் டிசைனில் (Robust Design) இந்த ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதால் தயக்கமின்று எங்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். சுலபமான நேவிகேஷனுக்காக முழுமையாக ரொட்டேட் (Rotate) ஆகும் க்ரௌன் (Crown) பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சை உங்கள் டிவைஸில் பயன்படுத்த எக்ஸ்வாட்ச் ஆப்-ஐ (XWatch App) பயன்படுத்தலாம்.
IOS மற்றும் ஆண்ட்ராய்ட் ஆகிய இரண்டு விதமான ஸ்மார்ட் போன்களுக்கும் கம்பேட்டிபிலாக (Compatible) இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வட்டிசில் ஈசி பேரிங்கிற்காக (Easy Pairing) ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 முதல் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








