அனைவருக்கும் இண்டர்நெட் வழங்க இருக்கும் புதிய திட்டங்கள்.!!

By Meganathan
|

உலகம் முழுவதிலும் இண்டர்நெட் பயன்பாடு தினமும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதை கருத்தில் கொண்டு உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிவேக இண்டர்நெட் வழங்கும் மாற்று திட்டம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதிற்கும் தடையில்லா அதிவேக இண்டர்நெட் வழங்கும் திட்டம் என்பதால் அதிக கவனத்துடன் பெரும் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. சாம்சங், ஃபேஸ்புக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தற்சமயம் பணியாற்றி வரும் சில இண்டர்நெட் வழங்கும் திட்டம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..

சாம்சங்

சாம்சங்

வாண்வெளியில் சுமார் 4600 மைக்ரோ சாட்டிலைட் எனப்படும் சிறு செயற்கைக்கோள் உதவியோடு உலகம் முழுவதிற்கும் மாதம் ஒன்றிற்க்கு 200 ஜிபி இண்டர்நெட் வழங்க முடியும் என்கின்றது சாம்சங் நிறுவனம். இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் 500 கோடி மக்களுக்கு இண்டர்நெட் சேவை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த திட்டமானது மொபைல் நெட்வர்க் வழங்கும் நிறுவனங்களின் உதவியோடு மக்களுக்கு தடையில்லா இண்டர்நெட் சேவை வழங்குவதாகும். தற்சமயம் வரை ஃபேஸ்புக் நிறுவனம் சாம்சங், எரிக்சன், மீடியாடெக், ஓபெரா மென்பொருள், நோக்கியா மற்றும் குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள்

கூகுள்

பலூன்களின் உதவியோடு இண்டர்நெட் வழங்குவதே கூகுள் நிறுவனத்தின் ப்ராஜக்ட் லூன் திட்டமாகும். சுமார் 32 கிலோ மீட்டர் உயரத்தில் பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் இண்டர்நெட் வழங்க முடியும் என்கின்றது கூகுள்.

அவுட்டர்நெட்

அவுட்டர்நெட்

ஜியோஸ்டேஷனரி நெட்வர்க் மற்றும் செயற்கைக்கோள்களின் உதவியோடு இண்டர்நெட் வழங்குவதே அவுட்டர்நெட் திட்டம் ஆகும். இந்த திட்டம் மக்களுக்கு இலவசமாக இண்டர்நெட் வழங்க திட்டமிட்டுள்ளதுண் குறிப்பிடத்தக்கது.

ஓ3பி

ஓ3பி

ஓ3பி O3b என்றால் 'Other 3 Billion' மற்ற 3 பில்லியன் என அர்த்தமாகும். இந்த எண்ணிக்கை தற்சமயம் இண்டர்நெட் பயன்படுத்தாதவர்களை குறிக்கின்றது. இந்த திட்டமும் செயற்கைக்கோள்களின் உதவியோடு இண்டர்நெட் வழங்க இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil about the Projects That Aim At Providing Internet To All.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X