கம்ப்யூட்டர் வேலை வேணுமா, உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா..?

Posted By:

படிச்சா கம்ப்யூட்டர் தான், நான் வெயிட் பண்றேன், சொல்பவர்களில் நீங்களும் இருக்கீங்களா, அப்படியானால் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சில ப்ரோகிராமிங் மொழிகளை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

கணினி துறையில் ஆர்வம் கொண்டு, அதே துறையில் வேலை வேண்டுமா, அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். மென்பொருள் துறையில் வேலை செய்ய அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சில ப்ரோகிராமிங் மொழிகளை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜாவா

ஜாவா

ஸ்மார்ட் தொலைகாட்சி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் இந்த ப்ரோகிராமிங் மொழி 1991 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஒர்க்கிள் நிறுவனத்தின் ஜாவா மொழி இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது.

பிஎச்பி

பிஎச்பி

இணையதளங்களை உருவாக்க இந்த மொழி அத்தியாவசியமான ஒன்றாகும். உலகளவில் பிரபலமாக இருக்கும் வேர்டுப்ரஸ், ஃபேஸ்புக் மற்றும் யாஹூ போன்ற தளங்களும் பிஎச்பி மொழியினை பயன்படுத்துகின்றன.

பெர்ல்

பெர்ல்

நாசாவை சேர்ந்த பொறியாளரால் 80களில் கண்டறியப்பட்ட பெர்ல் மொழியானது பல மென்பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது.

சி

சி

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்றான சி 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

ஆப்ஜக்டிவ் சி

ஆப்ஜக்டிவ் சி

ஐபோன் செயலிகளை உருவாக்க அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஆப்ஜக்டிவ் சி முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகின்றது.

ஜாவா ஸ்க்ரிப்ட்

ஜாவா ஸ்க்ரிப்ட்

இணையம் சார்ந்த செயலிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது ஜாவா ஸ்க்ரிப்ட் தான்.

விஷுவல் பேசிக்

விஷுவல் பேசிக்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விஷுவல் பேசிக் ப்ரோகிராமிங் பணியை எளிமையாக்குகின்றது.

ரூபி

ரூபி

24 வயதான ரூபி மொழியை கற்பது எளிமையாக இருப்பதோடு கோடிங் செய்வதும் எளிமையாகவே இருக்கின்றது.

பைத்தான்

பைத்தான்

துவக்கத்தில் கற்க வேண்டிய ப்ரோகிராமிங் மொழிகளில் பலரும் பரிந்துரைக்கும் மொழி தான் பைத்தான்.

சிஎஸ்எஸ்

சிஎஸ்எஸ்

இணையதளங்களின் வடிவமைக்க பயன்படுத்தப்படும் மொழிகளில் சிஎஸ்எஸ் முதன்மையாக இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Here is a list some programming languages that can help you land a job. This is interesting and useful for all.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்