Home
News

இதெல்லாம் ஆப்பிள் தான் செஞ்சாங்கனு உங்களுக்குத் தெரியுமா??

ஆப்பிள் இன்றைக்கு உலகம் அறிந்த நிறுவனமாக இருக்கிறது. ஆனால் துவக்கத்தில் ஆப்பிள் தோல்வியுற்ற கதையும் இருக்கிறது. அவற்றைத் தான் இங்கு வழங்கியுள்ளோம்..

By Meganathan

உலகத் தொழில்நுட்ப சந்தையில் பல்வேறு புதிய கருவிகளை அவ்வப்போது வெளியிடுவதில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலை வகிக்கின்றது. விலை அதிகம் என்றாலும் அதற்கேற்ற தரம் கொண்டிருப்பதால் ஆப்பிள் கருவிகள் உலகம் முழுக்க நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இன்று பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் துவக்கத்தில் சில பல்புகளை வாங்கியுள்ளது உங்களுக்குத் தெரியுமா. இங்கு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து சந்தையில் வெற்றி பெறாத சில ஆப்பிள் கருவிகளைத் தான் தொகுத்திருக்கின்றோம்..

குயிக் டேக் 100 (QuickTake 100)

குயிக் டேக் 100 (QuickTake 100)

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் கோடாக் நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் வணிக ரீதியிலான டிஜிட்டல் கேமராவினை அறிமுகம் செய்தது. $749 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கேமரா தயாரிப்புப் பணிகள் துவங்கிய மூன்று ஆண்டுகளில் நிறுத்தப்பட்டு விட்டது.

ஆப்பிள் கிராஃபிக்ஸ் டேப்ளெட் (Apple Graphics Tablet)

ஆப்பிள் கிராஃபிக்ஸ் டேப்ளெட் (Apple Graphics Tablet)

1979 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஆப்பிள் II டெஸ்க்டாப் கணினியின் துணை கருவியாகக் கிராஃபிக்ஸ் டேப்ளெட் கருவி அறிமுகம் செய்யப்பட்டது. கணினியில் டிஜிட்டல் முறையில் வரைய இந்தக் கருவி பயன்பட்டது. பின் அதிகளவு ரேடியோ ஃபிரீக்வன்ஸி மூலம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தக் கருவி நிறுத்தப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபாட் சாக்ஸ் (iPod Socks)

ஐபாட் சாக்ஸ் (iPod Socks)

குளிர்காலத்தில் ஐபாட் கருவிகளை வெப்பமாக வைத்துக் கொள்ளவும், கருவியில் கீறல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பான சாக்ஸ் வகைகளை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் பிப்பின் (Apple Pippin)

ஆப்பிள் பிப்பின் (Apple Pippin)

இன்று போல் பிளே ஸ்டேஷன் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் கருவிகள் அறிமுகம் செய்யப்படும் முன் ஆப்பிள் நிறுவனம் முதல் கேமிங் கன்சோல் கருவியினை அறிமுகம் செய்தது. ஆப்பிள் பிப்பின் என இந்தக் கருவி அழைக்கப்பட்டது. 1,00,000 கருவிகள் தயாரிக்கப்பட்டதில் வெறும் 42,000 கருவிகள் மட்டுமே விற்பனையானது.

மேக்கின்டோஷ் டிவி (Macintosh TV)

மேக்கின்டோஷ் டிவி (Macintosh TV)

ஆப்பிள் நிறுவனம் 1993 ஆம் ஆண்டிலேயே மேக்கின்டோஷ் டிவி வகைகளை அறிமுகம் செய்தது. 5 எம்பி ரேம், 160 எம்பி ஹார்டு டிரைவ் மற்றும் 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருந்த இந்தக் கருவி $2099 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. மோசமான விற்பனை காரணமாக நான்கு மாதங்களில் இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

ஆப்பிள் நியூட்டன் மெசேஜ் பேட் (Apple Newton MessagePad)

ஆப்பிள் நியூட்டன் மெசேஜ் பேட் (Apple Newton MessagePad)

ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகள் அறிமுகம் செய்யப்படும் முன் வெளியிடப்பட்ட பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டண்ட் கருவி தான் ஆப்பிள் நியூட்டன் மெசேஜ் பேட். வணிக ரீதியாகத் தொடுதிரை கொண்ட மொபைல் கருவியாக இந்தக் கருவி அமைந்தது. எனினும் போதிய வரவேற்பின்றி ஐந்து ஆண்டுகளில் இந்தக் கருவி திரும்பப் பெறப்பட்டு விட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
products you didn’t know Apple made
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X