உடனே சரி செய்யப்பட வேண்டிய ஜியோ கோளாறுகள்!

Written By:

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அதிகளவு வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இதுவரை ரிலையன்ஸ் ஜியோ சுமார் 5 மில்லியன் பயனர்களைச் சேர்த்திருக்கின்றது. மேலும் அந்நிறுவனம் சுமார் 100 மில்லியன் பயனர்களை அடையத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கின்றார்.

அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட நாள் முதல் அந்நிறுவனத்தின் புதிய சேவைகளில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது. இருந்தும் அந்நிறுவனத்தின் அறிமுக சலுகையின் மூலம் வழங்கப்பட்ட சேவைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாய்ஸ் கால்

வாய்ஸ் கால்

மற்ற நெட்வர்க் நிறுவனங்களுடனான இன்டர்கனெக்டிவிட்டி பிரச்சனையில் ரிலையன்ஸ் ஜியோ சிக்கித்தவிக்கின்றது. பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் போதுமான இன்டர்கனெக்டிவிட்டி வழங்காத காரணத்தால் கால் டிராப் கோளாறு ஏற்படுவதாக ரிலையன்ஸ் குற்றம் சாட்டியிருந்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ

ஜியோ

அதன் படி ரிலையன்ஸ் ஜியோ மூலம் பயனர்கள் மேற்கொண்ட சுமார் 15 கோடி அழைப்புகளில் 12 கோடி அழைப்புகள் தோல்வியுற்றதாக ஜியோ தெரிவித்துள்ளது. இதில் 6.13 கோடி அழைப்புகள் ஏர்டெல் நெட்வர்க் மூலம் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 4.8 கோடி அழைப்புகள் தோல்வியுற்றது. வோடபோன் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுமார் 4.69 கோடி அழைப்புகளில் அதிகபட்சம் 3.95 கோடி அழைப்புகள் தோல்வுற்றது. ஐடியா நெட்வர்க்கில் 4.39 கோடி அழைப்புகளில் சுமார் 3.36 கோடி அழைப்புகள் தோல்வியுற்றதாக ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில்

பதில்

கால் டிராப் மற்றும் நெட்வர்க் கனெக்டிவிட்டி கோளாறுகளுக்கு ஜியோ தான் காரணம். சரியான சோதனையில்லாமல் அதிகளவு பயனர்கள் பயன்படுத்தும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சாதரான விடயம் தான் என ஏர்டெல் பதில் அளித்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறைக்கப்பட்ட வேகம்

குறைக்கப்பட்ட வேகம்

ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஜியோ 4ஜி டேட்டா சேவைகளின் வேகம் கணிசமான அளவு குறைந்து வருகின்றது. செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு பின் நொடிக்கு 50 எம்பி என்ற வேகம் நொடிக்கு 6-10 எம்பி வரை குறைந்திருக்கின்றது.

சீரான வேகம்

சீரான வேகம்

இது படிக்க குறைவான வேகமாகத் தெரிந்தாலும், பயனர்களைப் பொருத்த வரை குறைந்த பட்சம் நொடிக்கு 8 எம்பி என்ற வேகம் சீராக இருக்க வேண்டும். எனினும் ஜியோ கனெக்ஷன் கோளாறுகளால் பயனர்கள் ஜியோ வேகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ ஆப்ஸ்

ஜியோ ஆப்ஸ்

இந்திய பயனர்களை கவரும் இலவச சேவைகள் நன்கு இருந்தாலும், ஜியோ ஆப்ஸ் சீராக இயங்காதது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. ஜியோ டிவி ஆப் அடிக்கடி கிராஷ் ஆவதாகவும் நீண்ட நேர பூட் ஆவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

வோல்ட்இ

வோல்ட்இ

பழைய ஸ்மார்ட்போன்களில் வோல்ட்இ தொழில்நுட்பம் இல்லாத பயனர்களால் ஜியோ 4ஜி வாய்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள இயலவில்லை. இந்த அம்சம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. வோல்ட்இ இல்லாமல் பல்வேறு இந்திய பயனர்கள் இன்னமும் 3ஜி போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜியோ சிம் பயனளிக்காது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேட்டரி

பேட்டரி

ரிலையனஸ் ஜியோ தனது இண்டர்நெட் சேவைகளை 4ஜி பேண்ட் மூலம் அறிமுகம் செய்திருக்கின்றது. எனினும் விலைப்பட்டியலில் 2ஜி, 3ஜி போன்றவையுடன் அதிகளவு வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். எனினும் ரிலையன்ஸ் ஜியோவின் ஒற்றைக் கவலை இவை அதிகளவு பேட்டரியை பயன்படுத்துவதே ஆகும். 2ஜி அல்லது 3ஜி சேவைகள் இல்லாததால் பயனர்களால் 4ஜி மட்டுமே பயன்படுத்த முடியும் இதனால் அதிகப்படியான பேட்டரி வெகு சீக்கிரமே தீர்ந்து விடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
problems that Reliance Jio needs to fix right away Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்