Home
News

அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..

இன்றைய காலகட்டத்தில் எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதேபோல், ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் அனைவரிடமும் ஒரு இயர்போன்ஸ் இருக்கிறது. இதில் 90% பேர் ப்ளூடூத் (Bluetooth) ஹெட்செட்களை பயன்படுத்துகிறார்கள்.

ப்ளூடூத் இயர்போன்ஸ் (Bluetooth earphones) மற்றும் ப்ளூடூத் ஹெட்போன்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ப்ளூடூத் இயர்பட்ஸ் சாதனங்கள் இப்போது மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கின்றன. இதனால், மக்கள் குறைத்த விலையில் அனுபவிக்க கிடைக்கும் வயர்லெஸ் இயர்போன்ஸ் அனுபவத்தை ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? உஷார் மக்களே.!

என்ன தான் வயர்லெஸ் அனுபவம் மலிவு விலையில் கிடைத்தாலும் ஒரு அளவுக்கு தானே பயன்படுத்த வேண்டும். ஆனால், நமது மக்களில் பலர், ப்ளூடூத் இயர்போன்ஸ் மற்றும் ஹெட்போன்ஸ் சாதனங்களை முழு நேர சாதனமாக, அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அப்படித்தான் இதுவும். அளவுக்கு மீறிய ப்ளூடூத் பயன்பாடு, உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பலருக்கும் பல விதமான உடல் உபாதைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்னென்னெ சிக்கல்களை மக்கள் இப்போது சந்திக்கின்றனர் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம் வாங்க.

1. கேட்கும் திறனில் சிக்கல்:
அதிக நேரம் ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்துவதனால், கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, முழு வால்யூம் உடன் பாடல்களை கேட்பது, மற்றும் முழு பாஸ் உடன் ப்ளூடூத் இயர்பட்ஸ் மற்றும் இயர்போன்ஸ் சாதனங்களை பயன்படுத்துவது செவி திறனை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் மற்றும் நீண்ட காலத்திற்கு ஒலி அலைகள் செவி பாறையில் மோதுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? உஷார் மக்களே.!

2. நீங்காத ஒற்றை தலைவலி மற்றும் பொதுவான தலைவலி:
நீண்ட நேரம் ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்துவதனால், அதில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் காரணமாக ஒற்றை தலைவலி மற்றும் நீங்காத பொதுவான முழு தலைவலி போன்ற சிக்கல்களை மக்கள் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

3. இருதய பாதிப்பு:
காதுக்கும் இருதயத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தாலும் கூட, ப்ளூடூத் இயர்போன்ஸ் மூலம் நீங்கள் கேட்க்கும் ஒலியின் காரணமாக உங்கள் இருதயம் சில நேரங்களில் வேகமாக துடிக்கிறதாம். இதனால், நாளடைவில் இருதய கோளாறு ஏற்பட வாய்ப்புளள்து என்று கூறப்பட்டுள்ளது.

4. காதுகளின் காற்றோட்டப்பாதையில் அடைப்பு.. பாக்டீரியா தொற்றுநோய்:
ஹெட்போன், இயர்பட்ஸ், இயர்போன்ஸ் போன்ற சாதனங்கள் காதுக்குள் நிகழும் காற்றோட்டத்தை துண்டிக்கின்றன என்பது உண்மையே. இதனால், காதுகளில் உள்ள காற்றுப்பாதை அடைக்கப்படுகிறது. இதனால், காதுக்குள் பாக்டீரியாவின் தாக்குதல் அதிகமாகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமா பல தொற்றுநோய்களுக்கு ப்ளூடூத் பயனர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

5. கவனச்சிதறல்:
மாணவர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்கள் என்று பலரும் இப்போது ஹெட்போன்ஸ் பயன்படுத்துகிறார்கள் இதனால், கவனச்சிதறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக வாகனம் ஓட்டும் பொழுது இப்போது பலர் ஹெட்போன்ஸ் அணிந்து செல்கிறார்கள். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பே ஏற்படுகிறது. இத்தகைய காரணிகளால் மக்களை அதிக நேரம் ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pro Long Usage Of Bluetooth Headphones Earbuds and Earphones Can Cause Health Issues Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X