வயாகரா வாங்கியவர்களின் தகவல்களை வெளியிட்ட ஆந்திர அரசு இணையதளம்!

இந்த குளறுபடியை முதலில் கண்டுபிடித்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீநிவாஸ் கோடாளி கூறுகையில், ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட தகவல்கள் தினமும் பட்டியலிடப்படுகிறது.

|

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ஆந்திர பிரதேச மாநில அரசு இணையதளம், பாதுகாப்பு தொடர்பான இரு முக்கிய பிரச்சனைகளில் மாட்டி கொண்டது. சாதி, மதம், வங்கி கணக்கு எண், மொபைல் எண் மற்றும் ரேசன் அட்டை எண் உள்ளிட்ட ஆதார் அட்டையின் தகவல்களை கொண்ட 1.34 லட்சம் குடிமக்களுடைய தகவல்கள், ஒரு முறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

வயாகரா வாங்கியவர்களின் தகவல்களை வெளியிட்ட ஆந்திர அரசு இணையதளம்!

மற்றொரு சந்தர்ப்பத்தில், 89 லட்சம் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் பணியாளர்களின் ஆதார் தகவல்கள் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது, ஆந்திர பிரதேச அரசின் பாதுகாப்பற்ற இணையதளத்தில், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவக் கடைகளில் இருந்து மருந்து வாங்கி சென்றவர்களின் பெயர்கள் மற்றும் போன் நம்பர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஹூஃப்பின்டன்

ஹூஃப்பின்டன்

இது குறித்து ஹூஃப்பின்டன் போஸ்ட்டில் வெளியான ஒரு செய்தியில், இந்த மாநிலத்தின் ராயல்சீமா பகுதியைச் சேர்ந்த அனந்த்பூரில் உள்ள அண்ணா சஞ்ஜீவினி ஸ்டோரில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி வயாகராவுக்கு நிகரான பதிப்பாக அறியப்படும் சுஹாகரா 50 என்ற மாத்திரையை வாங்கி சென்ற பெயர்கள் மற்றும் ஃபோன் எண்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய அண்ணா சஞ்சீவினி இணையதளத்தில் உள்ள இந்தத் தகவல்களை யார் வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஸ்ரீநிவாஸ் கோடாளி

ஸ்ரீநிவாஸ் கோடாளி

இந்த குளறுபடியை முதலில் கண்டுபிடித்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீநிவாஸ் கோடாளி கூறுகையில், ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட தகவல்கள் தினமும் பட்டியலிடப்படுகிறது. மேலும் ஆர்டர் ஐடி, ஸ்டோர் செயல்பாடு ஐடி, வாடிக்கையாளர் பெயர், வாடிக்கையாளர் ஃபோன் நம்பர், அவர்களால் வாங்கப்பட்ட மருந்துகளின் விவரங்கள் மற்றும் தொகை போன்ற மற்ற தகவல்கள் ஆகியவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது இந்த இணைப்பை நீக்கப்பட்டு உள்ளது.

தேசிய டிஜிட்டல் சுகாதார ஆணையம்

தேசிய டிஜிட்டல் சுகாதார ஆணையம்

குடிமக்களின் மருத்துவ தகவல்களைப் பாதுகாப்பாக வைப்பதில் கவனக் குறைவாக செயல்பட்ட ஆந்திர மாநிலத்தின் இந்தச் செயல்பாடு, மருத்துவ உதவிக்கான டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டத்தை (டிஐஎஸ்ஹெச்ஏ) மீறியது ஆகும். இந்த டிஐஎஸ்ஹெச்ஏ மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஒரு மத்திய உருவாக்கத்தை, தேசிய டிஜிட்டல் சுகாதார ஆணையம் என்று அழைக்கிறார்கள். இந்த ஆணையம், எலக்ட்ரிக் சுகாதார (இ-ஹெல்த்) தரத்தை கண்காணித்து மேம்படுத்துவதோடு, இ-ஹெல்த் பதிவுகளை பத்திரமாக பாதுகாப்பது மற்றும் பராமரிப்பதற்கு ஏற்ற தனிப்பட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளது.

 தகவல்கள்

தகவல்கள்

இது தவிர, மருத்துவ பயன்பாட்டிற்கு அத்தியாவசியமாக உள்ள தங்களுடன் தொடர்புடைய டிஜிட்டல் சுகாதார தகவல்கள் இல்லாத பட்சத்தில், மூன்று வேலை நாட்களுக்குள், சேமிக்கப்பட்ட மற்றும் பகிரப்பட்ட தங்களின் மருத்துவ பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் நீக்கம் செய்வதற்கு, குறிப்பிட்ட நபர்களுக்கு, டிஐஎஸ்ஹெச்ஏ அதிகாரம் அளித்துள்ளது.

இது போன்ற தகவல்கள் கசியும் பட்சத்தில், குறிப்பிட்ட தனிப்பட்ட நபர்களின் உடல்நலத்திற்காக உட்கொள்ளும் மருத்துகளை குறித்து வெளியே தெரிந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எய்ட்ஸ் மற்றும் மனஅழுத்தம் போன்ற மருத்துவ பிரச்சனைகளை சில நபர்கள் வெளியிடுவது, இந்த சமுதாயத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.

தனியுரிமை

தனியுரிமை

இது குறித்து உலக தனியுரிமை கழகத்தின் நிறுவுனர் மற்றும் நிர்வாக இயக்குனரான பம் டிக்ஸன், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பணியாளர்களிடம் கடுமையான மருத்துவ பிரச்சனைகள் இருப்பதாக கண்டறியப்பட்டால், வேலையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படலாம். அதேபோல, கடந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் உள்ள மருத்துவ நிலையை வைத்து பள்ளியில் குழந்தைகள் மோசமான முறையில் நடத்தப்பட்டலாம்" என்றார்.

Best Mobiles in India

English summary
Private data of people who bought Viagra in Andhra Pradesh exposed online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X