வந்தது ஜூம் கால்., அட்டெண்ட் பண்ண எல்லாருக்கும் வேலை இல்ல- 900பேர் பணி நீக்கம்: என்ன நடந்தது?

|

கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து பல நிறுவனங்களும் வேலை இழப்பு நடவடிக்கை எடுத்தது. கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் வீரியம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் வேலை இழப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அதன்படி அமெரிக்காவில் உள்ள பெட்டர் டாட் காம் நிறுவனம் மேற்கொண்ட பணி நீக்க நடவடிக்கை அமெரிக்காவில் பலரையும் அதிர்ச்சியில் வீழ்த்தி இருக்கிறது.

பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம்

பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம்

அமெரிக்காவில் இருக்கும் பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம் அடகுக்கு பொருள் வைப்பது, ரியல் எஸ்டேட் பணி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் பத்தாயிருக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 900 ஊழியர்களுக்கு ஜூம் செயலி மூலம் அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க்

நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க்

இந்த அழைப்பில் மறுபுறம் நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க் பேசினார். இந்த அழைப்பை யார் எல்லாம் எடுத்து பேசுகிறீர்களோ அவர்கள் எல்லாம் வேலையில் நீக்கப்பட்டுவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார். இதை கேட்ட 900 ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி உங்களுக்கு பெட்டர் டார் காம்-ல் வேலை இல்லை என அறிவித்ததையடுத்து அவர் அதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறார்.

பணி நீக்க நடவடிக்கை

பணி நீக்க நடவடிக்கை

அதில் கடந்தமுறை பணி நீக்க நடவடிக்கை மேற்கொண்ட போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் என குறிப்பிட்டார். பொதுவாக இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதில்லை ஆனால் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் நேரத்தை திருடி இருக்கின்றனர் என குறிப்பிட்டார். அமெரிக்க ஊடக தளங்கள் இந்த ஜூம் அழைப்பை நரகத்தில் இருந்த வந்த அழைப்பு என குறிப்பிட்டிருக்கின்றனர். வேலை இழப்பு நடவடிக்கை என்றாலும் ஜூம் அழைப்பு மூலம் ஒரே நேரத்தில் 900 பேரை நீக்கியது அதிர்ச்சி தரும் தகவலே ஆகும் என குறிப்பிடுகின்றனர்.

ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம்

ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம்

மறுபுறம் ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம் அதிரடி வேலை வாயப்பு ஒன்றை அறிவித்துள்ளது. முகத்தை காட்டினால் இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி ஊதியம் வழங்குகிறார்களா என்ற சந்தேகம் வரலாம். இது தங்களை போன்ற முகம் மற்றும் குரலைக் கொண்டு ரோபோவை உருவாக்குவதற்கான உரிமைக்கோரல் ஆகும். ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப் ஆன ப்ரோமோபோட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் ரோபோவின் முகத்தை ஒருசார் எதார்த்தமாக இல்லாமல் ஒரிஜினலாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. மனிதர்களை போன்றே பிரதிபலிக்கும் முகம் மற்றும் குரல் உடன் ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ரோபோடிக்ஸ் நிறுவனம் $200,000 அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.1.5 கோடி செலுத்துவதாக அறிவித்துள்ளது.

ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப்

ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப்

ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப் ஆனது ப்ரோமோபாட்டின் தகவலின்படி, மனித உருவ ரோபோக்கள் பல சூழல்களில் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். வடஅமெரிக்கா மற்றும் மத்திய கிழக்க நாடுகளில் உள்ள மால்கள், விமான நிலையங்கள் உட்பட பிற பொது இடங்களுக்கு ப்ரோமோபாட்-ன் ரோபோ-சி ரோபோக்களை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்க நிறுவனத்திற்கு மனித உருவ முகம் மற்றும் குரல் கொண்ட அதே மாதிரியான ரோபோக்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. ரோபோ-சி அதன் வி.4 சாதனத்தின் பாரம்பரிய ரோபோ தோற்றத்துடன் ஒப்பிடும் போது மனித முகத்தை கொண்டிருக்கிறது.

மனித முகங்களை கொண்ட ரோபோக்கள்

மனித முகங்களை கொண்ட ரோபோக்கள்

மனித முகங்களை கொண்ட ரோபோக்களை வடிவமைக்க ப்ரோமோபாட் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக ரோபோக்களின் முகங்கள் கணினிகள் மூலமாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் ப்ரோமோபாட் மனிதர்களின் முகங்களை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. தங்கள் முகத்தை நிறுவனத்திடம் காட்டும் பட்சத்தில் அதே முகத்தில் ரோபோக்கள் தயாரிக்க நிறுவனம் உரிமைக் கோருகிறது.

Best Mobiles in India

English summary
Private company that laid off 900 people through Zoom Call: employees in shock

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X