பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக புதிய சட்டம்: சுந்தர் பிச்சை.!
முன்னதாக கூகுள் நிறுவனம் அதன் பயனர்களின் இருப்பிடத் தரவுகளை சேகரிப்பது பற்றிய கேள்விகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்கக்கூடிய மக்களுக்கு மட்டுமே தனியுரிமை ( ப்ரைவசி) கிடைக்கும் என்னும் அளவிற்கு அது ஒன்றும் "ஆடம்பரப் பொருளாக" இருக்க முடியாது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில், தனியுரிமை மற்றும் பயனர்களின் தரவிற்கான தனது நிறுவனத்தின் அணுகுமுறையை நியாபப்படுத்தியுள்ளார் சுந்தர் பிச்சை.

தனியுரிமை
"தனியுரிமை என்பது உலகிலுள்ள அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கூகுளின் அணுகுமுறை தனியுரிமையை மேலும் ஜனநாயகரீதியாக மாற்றுகிறது " என்று சுந்தர் குறிப்பிடுகிறார்.
முன்னதாக கூகுள் நிறுவனம் அதன் பயனர்களின் இருப்பிடத் தரவுகளை சேகரிப்பது பற்றிய கேள்விகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் பேசும் போது முதல்முதலாக இதைப் பார்த்தேன்
இன்றைய மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன அல்லது பகிரப்படுகின்றன என்பதைப் பற்றிய அக்கறை கொண்டுள்ள நிலையிலும் , அவர்கள் அனைவரும் தனியுரிமையை தங்களுக்கு ஏற்றாற்போல் வரையறுக்கிறார்கள். நான் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடம் பேசும் போது முதல்முதலாக இதைப் பார்த்தேன்.

மக்களின் தரவுகள்
தனியுரிமை என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. தெளிவானவை என்பதைப் பற்றி மக்களின் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி நிறுவனங்கள் தெளிவான, தனிப்பட்ட தேர்வுகள் கொடுப்பது முக்கியம் என்கிறார் சுந்தர்.

கூகுள் நிறுவனம்
இந்த வாரம் நடைபெற்ற வருடாந்திர I / O டெவலப்பர் மாநாட்டில், கூகுள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் மற்றும் தளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு கூடுதலான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருவிகளை அறிவித்துள்ளது.

அனைவருக்குமானது"
"அனைவருக்குமானது" என்பதே கூகுளின் அடிப்படை தத்துவம் ஆகும். இது உலகளாவில் அணுகக்கூடிய மற்றும் பயனுள்ளதாக இருக்கும் தயாரிப்புகளை உருவாக்கும் எங்களது நோக்கத்தை கட்டமைத்துள்ளது. அதனால்தான், ஹார்வர்ட் போராசிரியராக இருந்தாலும் இந்தோனேசியாவின் கிராமப்புற மாணவராக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவாக ஒரே மாதிரி கூகுள் சர்ச் வேலை செய்கிறது.

அமெரிக்க அரசை கேட்டுக்கொண்டுள்ளார்
பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அவர் அமெரிக்க அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

'மறைக்கடிக்கப்படும்' சுந்தர் பிச்சை : ஒரு தமிழர் என்பதாலா.?
"அட.. சுந்தர் பிச்சை நம்ம ஆளுப்பா.. எங்களுக்கு தெரியாதா அவரைப்பற்றி..? நீ என்னத்த புதுசா சொல்லிடப்போற.? போங்க தம்பி போய் வேற ஏதாச்சும் தெரியாத மேட்டர் இருந்தா கொண்டு வா.!" என்று முன்கூட்டியே எதையும் கணித்து விடாதீர். சுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே புதிய அறிமுகமொன்றும் தேவையில்லை என்பது வெளிப்படை.!
சுந்தர் பிச்சை பற்றி அப்படி உங்களுக்கு என்னத்தெரியும்..? தமிழ் நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர், அம்மா - லட்சுமி, அப்பா - ரகுநாத பிச்சை, சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ - இது எல்லோருக்குமே தெரியுமே..!! அவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட இதையெல்லாம் சொல்லி விடும்.

ஏன் மறைக்கப்படுகிறது.?
ஆனால், எல்லாம் அறிந்த விக்கிப்பீடியா கூட அறியாத சிலசுந்தர் பிச்சை பற்றிய அசாதாரண, சுவாரசியமான உண்மைகள் சில உள்ளன. சுந்தர் பிச்சை பற்றிய பல விடயங்கள் ஏன் மறைக்கப்படுகிறது.? ஏன் பிரபலமாக்கப்படுவதில்லை - அவர் ஒரு தமிழர் என்பதாலே..? தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதாலோ.? - தெரியவில்லை.! அதையெல்லாம் வெளிக்கொணரும் 'சுந்தர் பிச்சை ஸ்பெஷல்' தொகுப்பே இது.!

பழக்கம்
ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

ஸ்கூட்டர் வாங்க
ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.

வகுப்புத்தோழி
ஒரு இரசாயன பொறியாளர் ஆன சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை, ஐஐடி காரக்பூரில் சுந்தர் பிச்சையின் வகுப்புத்தோழியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இளம் சுந்தர் பிச்சையிடம்
ஒரு மின் பொறியாளராக தன் வேலையில் சந்தித்த சவால்களை பற்றி இளம் சுந்தர் பிச்சையிடம் பேசியதின் மூலம் தான் தன் மகனுக்கு தொழில்நுட்பம் மீது ஆர்வம் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சையின் தந்தை நம்புகிறார்.

அசாதாரண பரிசு
சுந்தர் பிச்சை குழந்தையாக இருக்கும் போதே அவரின் தீவிரமான ஆர்வத்தை விட, இறைவன் இன்னுமொரு அசாதாரண பரிசை சுந்தர் பிச்சைக்கு வழங்கி இருந்தார். அதாவது நம்ப முடியாத வண்ணம் (பைத்தியகாரத்தனமாக) எண்களை நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரே ஒருமுறை டயல் செய்த தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்துக் கொள்வாராம்.!

கிரிக்கெட் கேப்டன்
ஐ.ஐ.டி கரக்பூரில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் என அனைத்திலுமே சுந்தர் பிச்சை தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார்.

மெக்கன்சி & கம்பெனி
கூகிள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சேர்வதற்கு முன் மெக்கன்சி & கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையாளராக பணியாற்றினார்.

ஈடுபாடு
2004-ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் மற்றும் க்ரோம் ஓஎஸ்-க்கான தயாரிப்பு மேலாண்மையாளராக இணைந்த்தில் இருந்து சுந்தர் பிச்சை கூகுள் ட்ரைவ்-தனில் மிக ஈடுபாடோடு இருந்தார் உடன் ஜிமெயில் மற்றும் கோகுல் மேப்ஸ்-ஐயும் மேற்பார்வையிடுவாராம். இப்போது கூகுள் தேடல், விளம்பரங்கள், வரைபடங்கள், கூகுள் பிளே ஸ்டோர், யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவைகள் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசியல் மற்றும் நாடகம்
சுந்தர் பிச்சை எப்போதுமே கூகுள் நிறுவனத்தில் நிகழும் அரசியல் மற்றும் நாடகங்களில் இருந்து வெளியே தங்கி இருக்கும் திறமை பெற்றவர் ஆவார்.


Click it and Unblock the Notifications