இந்தியாவில் அறிமுகமான 5G சேவை: பிரதமர் நரேந்திர மோடி கூறிய முக்கியத் தகவல்.!

|

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 5G சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதாவது தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

13 நகரங்களில் அறிமுகம்

13 நகரங்களில் அறிமுகம்

குறிப்பாக இந்த 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் உள்பட 13 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் படிப்படியாக இந்த 5ஜி சேவை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 5ஜி சேவை இன்று அறிமுகமானாலும் கூட அவை உங்கள் மொபைலுக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும்.

எச்சில் துப்பி பாஸ்வோர்ட் போட்டா போன் அன்லாக் ஆகுமா? நெட்டிசன்களை வியக்க வைத்த இளம் பெண்..எச்சில் துப்பி பாஸ்வோர்ட் போட்டா போன் அன்லாக் ஆகுமா? நெட்டிசன்களை வியக்க வைத்த இளம் பெண்..

 5ஜி

பின்பு 5ஜி அடிப்படையிலான ட்ரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள்,விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் பிரதமர் மோடி மேற்பார்வையிட்டார்.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

5ஜி வழிவகுக்கும்

டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்றும், இந்தியாவை அடுத்த வளர்ச்சிக்குக் கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும் என்றும், 5ஜி சேவை மூலம் உலக அளவில் இந்திய சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்றும் இந்த 5ஜி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதுதான் விஷயம்: வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் அறிமுகம்- மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்த சுவாரஸ்ய தகவல்!அதுதான் விஷயம்: வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் அறிமுகம்- மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்த சுவாரஸ்ய தகவல்!

5ஜி வேகம்

5ஜி வேகம்

இப்போது நாம் பயன்படுத்தும் 4ஜி சேவையை விட பல மடங்கு வேகம் தரும் இந்த 5ஜி சேவை. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் முழு நீளப் படத்தைக் கூட வெறும் சில நொடிகளில் டவுன்லோட் செய்ய முடியும். குறிப்பாக இந்த 5ஜி சேவை நாட்டின் இணைய வேகத்தை அடுத்த கட்டத்திற்குஎடுத்து செல்லும்.

நமது கேலக்ஸியில் எட்டு புதிய எதிரொலி கருந்துளை பைனரிகள்..எம்ஐடி ஆராய்ச்சி குழு வெளியிட்ட ரிப்போர்ட்..நமது கேலக்ஸியில் எட்டு புதிய எதிரொலி கருந்துளை பைனரிகள்..எம்ஐடி ஆராய்ச்சி குழு வெளியிட்ட ரிப்போர்ட்..

ஜியோ

ஜியோ

மேலும் சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடபோ-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன. குறிப்பாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. இதில் பெரும்பாலான அலைவரிசையை
வாங்கி ஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

மொபைல் சந்தை

மொபைல் சந்தை

சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய மொபைல் சந்தையாக இந்தியா இருப்பதால், 5ஜி சேவை தொடக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த 5ஜி சேவை பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேலும் இந்த 5ஜி சேவை அறிமுகம் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரிலையண்ஸ் ஜியோவின் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பல கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Prime Minister Narendra Modi launched 5G service in India: full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X