Home
News

வலுவான புதிய சட்டம்: தனிநபர் தரவுகளை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை- பிரதமர் மோடி!

தரவுகளை பாதுகாக்க வலிமையான சட்டத்தை கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச பொருளாதார மையத்தின் சார்பிலான மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

செயலிகள் மீது நடவடிக்கை

செயலிகள் மீது நடவடிக்கை

தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69 இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இந்திய தரவுகளின் தொகுப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு விரோதமாகவும் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் இதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னோக்கி செல்லும் டிஜிட்டல் இந்தியா

முன்னோக்கி செல்லும் டிஜிட்டல் இந்தியா

ஒவ்வொருவரின் தனிநபர் பாதுகாப்பு என்பது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. டிஜிட்டல் இந்தியாவை செயல்படுத்தும் மத்திய அரசின் செயல்பாடு தொடர்ந்து முன்னோக்கி செல்கிறது.

சர்வதேச பொருளாதார மைய மாநாடு

சர்வதேச பொருளாதார மைய மாநாடு

இந்த நிலையில் சர்வதேச பொருளாதார மையத்தின் சார்பிலான மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் இந்தியாவில் துடிப்பான தொடக்கத்துறை உள்ளது. நமது பொருளாதார உற்பத்தியில் 2/3 பங்கு நகரங்களில் இருந்தே வருகிறது. எளிதான வாழ்க்கை, வணிகத்தை எளிதாக்குவது மற்றும் காலநிலை உணர்திறன் மேம்பாடு ஆகியவற்றில் எங்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு உள்ளது என கூறினார்.

வேகமாக முன்னேறி வரும் மின்சார இயக்கம்

வேகமாக முன்னேறி வரும் மின்சார இயக்கம்

அதோடு எங்கள் நகரங்களில் இயற்பியல் மற்றும் டிஜிட்டல் உலகங்களை ஒன்றிணைக்க பணியாற்றி வருகிறோம் என குறிப்பிட்டார். 2025-க்குள் இந்தியாவில் 25 நகரங்களில் மெட்ரோ சேவைகளுடன் இருக்கும் என கூறினார். அதோடு மின்சார இயக்கம் குறித்தும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் இணைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை

அதிகரிக்கும் இணைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை

இந்தியாவில் 1.3 பில்லியன் ஆதார் அட்டைகள், 1.1 பில்லியன் மொபைல் இணைப்புகள் மற்றும் 750 மில்லியன் இணைய சந்தாதாரர்களை கொண்டுள்ளதாக கூறினார். அதோடு நாட்டின் கிராமங்களில் 3,00,000 பொதுவான சேவை மையங்கள் மூலம் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருவதாக கூறினார்.

யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரிப்பு

யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரிப்பு

மேலும் அடுத்த சில ஆண்டுகளில் 6,00,000 கிராமங்கள் ஃபைபர் நெட் மூலம் இணைக்கப்படும் என அவர் கூறினார். அதேபோல் மாதத்திற்கு 2 பில்லியனுக்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தரவுகளை பாதுகாக்க வலிமையான சட்டம்

தரவுகளை பாதுகாக்க வலிமையான சட்டம்

செயற்கை நுண்ணறிவு, இணைய தொழிலுக்கான கருவிகள் உற்பத்தி உள்ளிட்டவற்றின் முதலீடுகளை அதிகரிக்க அரசு ஊக்கமளித்து வருவதாகவும் தரவுகளை பாதுகாக்க வலிமையான சட்டத்தை கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Source: moneycontrol.com

Best Mobiles in India

English summary
Prime Minister Modi said India is taking steps to implement strong law for data protection
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X