ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டம்: காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர்.!

|

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதாவது இந்த டிஜிட்டல் சுகாதர திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சுகாதார திட்டத்தில்

அதேபோல் டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு உடல்நலம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் டேப்லெட் உடன் அறிமுகமா? என்னவெல்லாம் இதில் எதிர்பார்க்கலாம்?மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் டேப்லெட் உடன் அறிமுகமா? என்னவெல்லாம் இதில் எதிர்பார்க்கலாம்?

 பாரத் டிஜிட்டல் சுகாதாரத்

இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்பு பேசியது என்னவென்றால், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். அதேபோல் இந்தியாவின் சுகாதார கட்டமைப்புகளில் புரட்சிகர மாற்றத்தை கொண்டுவரும் சக்தி கொண்ட ஒரு சுகாதார திட்டத்தை இன்று தொடங்குகிறோம்.

நண்பனுக்கு நண்பன்., குருவுக்கு குரு- 23வது பிறந்தநாளை கொண்டாடும் நண்பனுக்கு நண்பன்., குருவுக்கு குரு- 23வது பிறந்தநாளை கொண்டாடும் "கூகுள்": வாழ்த்துகள் சொல்வோம்!

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்

குறிப்பாக மூன்று வருடங்களுக்கு முன்பு பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. பின்பு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி.

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!

 தடுப்பூசி திட்டத்தின் மூலம்

மேலும் இலவச தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் 90 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு கோவின் செயலியின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், பதிவு செய்வதில் தொடங்கி சான்றிதழ் வழங்குவது வரை இந்த செயலி மிகவும் உதவியாக இருந்நது என மோடி பேசினார்.

"ரிக்‌ஷா இழுக்க தான் சரினு சொந்தக்காரங்க சொன்னாங்க"- ஃப்ரெஷ்வொர்க்ஸ் சிஇஓ தமிழர் கிரீஷ்: இப்போ வேற லெவல்!

விரும்புகிறேன் என்று கூறினார் மோடி. அதாவது கொரோனா நோயாளிகளுக்கு

குறிப்பாக நமது நாட்டின் அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார் மோடி. அதாவது கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவது, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது, அவர்களின் முயற்சிகள் தேசத்திற்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது என்றும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது உதவியது என்று கூறினார் பிரதமர் மோடி.

கத்தி பட பாணியில் கருத்து கணிப்பு- சராசரி இந்தியர் ஐபோன் 13 வாங்க 700 மணிநேரம் உழைக்கனும்: நம்ம 2-வது இடம்!கத்தி பட பாணியில் கருத்து கணிப்பு- சராசரி இந்தியர் ஐபோன் 13 வாங்க 700 மணிநேரம் உழைக்கனும்: நம்ம 2-வது இடம்!

தடுப்பூசி செலுத்தியதற்கான

அதேபோல் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை வழங்க ஒவ்வொரு தனி நபருக்கும் கோ-வின் இணையதளம் ஏற்கனவே, டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அதன்படி இந்த சான்றிதழை ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களில் சேமிக்க முடியும்.
தேவைப்படும்போது தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக காட்ட முடியும்.

ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..

ந்த சான்றிதழ் தேவைப்படும்

குறிப்பாக இந்த சான்றிதழ் தேவைப்படும் நுழைவிடங்களான, மால்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கூட இந்த சான்றிதழ்களை காகித வடிவில் அல்லது டிஜிட்டல் வடிவிலும் காட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Prime Minister launches Ayushman Bharat Digital Health Mission: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X