Jio, Airtel நிறுவனங்களின் 5G ரீசார்ஜ்களின் விலை நிர்ணயம் இவ்ளோ தானா?

|

நாட்டில் 5ஜி சேவைகள் அறிமுகமாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலைப்பாட்டில், 5ஜி ரீசார்ஜ் திட்டங்களின் விலை நிர்ணயம் குறித்த, அதாவது 5ஜி கட்டணம் குறித்த "ஒரு நம்ப முடியாத" தகவல் வெளியாகி உள்ளது!

அறியாதோர்களுக்கு, அக்டோபர் 1 ஆம் தேதி நடக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் (Indian Mobile Congress) மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை (5G Network) அறிமுகம் செய்ய உள்ளார்!

நேற்று வரையிலாக நமக்கு கிடைத்த தகவல்கள், 5ஜி திட்டங்களுக்கான கட்டணம் (விலை நிர்ணயம்) ஆனது 4ஜி திட்டங்களை விட சற்றே அதிகமாக இருக்கும் என்று தான் கூறின!

ஆனால் இன்று வெளியான தகவல்!

ஆனால் இன்று வெளியான தகவல்!

முன்னதாக வெளியான தகவல்கள், 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் ஆனது 4ஜி திட்டங்களை விட சுமார் 20% அதிகமாக இருக்கும் என்றே கூறின.

ஆனால் தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின்படி, 5ஜி ரீசார்ஜ்களின் விலை நிர்ணயமானது 4ஜி-யை போலவே இருக்கலாம் என்கிறது!

ஜியோ மற்றும் ஏர்டெல்.. இரண்டுமே!

ஜியோ மற்றும் ஏர்டெல்.. இரண்டுமே!

வெளியான தகவலின்படி, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே தங்கள் 5ஜி ரீசார்ஜ்களை 4ஜி திட்டங்களை போலவே விலை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே தத்தம் 5ஜி பேக்குகளின் விலை விவரங்கள் குறித்து எந்த ஒரு பொது அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும் கூட, அவைகள் 4ஜி பேக்குகளின் விலையிலேயே தான் இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

5G சிம் பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!5G சிம் பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!

இதன் பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரம்!

இதன் பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரம்!

5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் ஆனது 4ஜி-யை போலவே இருப்பதற்கு பின்னால், ஒரு வியாபார தந்திரம் உள்ளது.

அது என்னவென்றால், ஏற்கனவே 4ஜி திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் அதே விலையில் 5ஜி திட்டங்களும் கிடைக்கும் பட்சத்தில், அது "வெகுஜன தழுவலை" தூண்டும்.

அதாவது, பெருமளவிலான மக்கள் 5ஜி சேவைகளை முடிந்த வேகத்தில் ஏற்றுக்கொள்வார்கள்!

அதிகமாக வசூலிக்க வாய்ப்பே இல்லை!

அதிகமாக வசூலிக்க வாய்ப்பே இல்லை!

அனாலிசிஸ் மேசனின் இந்திய தலைவர் ஆன, ரோஹன் தமிஜாவும் கூற்றுப்படி, 5ஜி ஆப்ரேட்டர்கள் (அதாவது ஜியோ, ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள்) ஆரம்பத்திலேயே 4ஜி கட்டணத்தை விட அதிகமான பணத்தை வசூலிக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் "அவர்களின்" முக்கிய இலக்கு - உடனே அனைவரும் 5ஜி சேவையை தத்தெடுக்க வேண்டும் என்பதே ஆகும். இந்நிறுவனங்களின் முதல் வேலை - அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர்களுக்கு மிகவும் வேகமான 5ஜி சேவைக்கு பழக்கப்படுத்துவதே ஆகும்!

ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!

5ஜி போன்களில்

5ஜி போன்களில் "ஸ்பெஷலான" 5ஜி திட்டங்களும்!

5ஜி ஸ்மார்ட்போன்களுடன் "தொகுக்கப்ப்படும்" 5ஜி திட்டங்களை வழங்க, ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஆனது டெலிகாம் நெட்வொர்க்குகளுடன் கூட்டு சேரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

5ஜி கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் தேவை, மிகப்பெரிய அளவில் வளர உள்ளதால், மொபைல் பிராண்டுகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் இந்த கூட்டணி சற்றே அர்த்தமுள்ளதாக தெரிகிறது!

Jio-வின் 5ஜி போனும் அறிமுகமாகும்!

Jio-வின் 5ஜி போனும் அறிமுகமாகும்!

எகனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான ஒரு (கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்) அறிக்கையின்படி, 5ஜி நெட்வொர்க்கின் அறிமுகத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனம் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யும்

அதன் விலை நிர்ணயம் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

- 1600×720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.5 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
- கூகுளின் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஓஎஸ்
- 13MP + 2MP டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8MP செல்பீ கேமரா
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
- 5,000mAh பேட்டரி

5G: நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எப்போது கிடைக்கும்?

5G: நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எப்போது கிடைக்கும்?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் ஆனது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

அதனை தொடர்ந்து, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே கூடிய விரைவில் அதன் 5ஜி சேவைகளை கட்டவிழ்த்து விடும்.

இப்படியாக வருகிற 2023 ஆம் ஆண்டின் இறுதியில், நாடு முழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் 5ஜி சேவைகள் அணுக கிடைக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Price of Jio and Airtel 5G Plans Might Be Similar to 4G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X