சியோமி ஸ்மார்ட் டிவிகளின் விலை அதிகரிப்பு.! காரணம் என்ன?
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி,லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

சியோமி டிவிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டிவிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இன்று (ஜூலை 1) முதல் எங்கள் ஸ்மார்ட் டிவிகளின் விலை தவிர்க்க முடியாமல் 3-6 சதவீதம் அதிகரிக்கும் என சியோமி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

குறிப்பாக அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் கப்பல் கட்டணங்கள் காரணமாக ஸ்மார்ட் டிவிகளின் விலையை அதிகரித்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே பேனல்களின் விலையை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக, சிப்செட்களின் விலை 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் பேட்டரி பேக் செலவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கேமரா modules மற்றும் சென்சார்கள் 5 சதவீதம் உயர்ந்துள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளின் விலையை 10 முதல் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் டிவிகளின் விலை உயர்த்தப்படுவதால் மக்கள் மற்ற நாடுகளின் டிவிகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் சியோமி நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன்
சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடல் ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 93.7% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது பேட்ச்வாலின் மேம்பட்ட பதிப்பில் இயக்கப்படுகிறது, இது டிஸ்னி + ஹாட்ஸ்டார்,பிரைம் வீடியோ மற்றும் பல ஆப் வசதிகளை பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

ஆடியோவைப் பொறுத்தவரை சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் ஆனது 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை DTS-HD உடன் ஆதரிக்கிறது. பின்பு 3.5மிமீ ஆடியோ அவுட், எஸ்பிடிஐஎஃப் மற்றும் மூன்று எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பு ஆதரவுகள் சவுண்ட்பார், ஹோம் தியேட்டர் போன்ற பல சாதனங்களுடன் எளிதாக இணைக்க உதவுகிறது. மேலும் Sporting Mi Quick Wake வசதி இந்த ஸ்மார்ட் டிவியில்இடம்பெற்றுள்ளது, இது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை 5வினாடிகளில் பார்க்க அனுமதிக்கிறது.

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலில் Vivid Picture Engine (VPE) technology இருப்பதால் சிறந்ததிரைஅனுபவத்தை பெறமுடியும். அதேசமயம் துல்லியமான காட்சிகள் மற்றும் சிறந்த வண்ணங்களை வழங்க உறுதி செய்கிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.


Click it and Unblock the Notifications