சத்தமின்றி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு விலை உயர்வு.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சியோமி, ரெட்மி ஸ்மார்ட் டிவிகளின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, காரணம் தனித்துவமான அம்சங்களுடன் இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஒன்பிளஸ் டிவிகளின் விலை உயர்தப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சி கொடுக்கிறது என்றே கூறலாம்.

அதாவது டிவியை அசெம்பிள் செய்வதற்குத் தேவையான பொருட்களின் இறக்குமதி செலவு அதிகரிப்பு காரணமாக விலை உயர்வு ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளிவந்தள்ளது. மேலும் இப்போது விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட் டிவிகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் டிவி 32 ஒய் 1
32-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஒன்பிளஸ் டிவி 32 ஒய் 1 மாடலின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000 விலை உயர்த்தப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவி 40 ஒய்1
40-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஒன்பிளஸ் டிவி 40 ஒய்1 மாடலின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2500 விலை உயர்த்தப்பட்டு ரூ.26,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1
43-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1 மாடலின் முந்தைய விலை ரூ.26,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2500 விலை உயர்த்தப்பட்டு ரூ.29,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவி 50 யூ 1 எஸ்
50-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஒன்பிளஸ் டிவி 50 யூ 1 எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.39,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.7000 விலை உயர்த்தப்பட்டு ரூ.46,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவி 55 யூ 1 எஸ்
55-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஒன்பிளஸ் டிவி 55 யூ 1 எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.47,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.5000 விலை உயர்த்தப்பட்டு ரூ.52,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவி 65 யூ 1 எஸ்
65-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஒன்பிளஸ் டிவி 65 யூ 1 எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.62,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.68,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை உயர்வு தற்காலிகமானது என்றும் ஒன்பிளஸ் இதன் விலைகளை மீண்டும் திருத்தலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications