Home
News

அநியாயம் பண்ணும் Amazon.. 2 Prime சந்தா திட்டங்களின் மீதும் திடீர் விலை உயர்வு.. Netflix பரவால்ல போலயே!

நெட்பிளிக்ஸிற்கு (Netflix) அடுத்தபடியாக இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓடிடி பிளாட்ஃபார்ம் (OTT Platform) என்றால், அது அமேசான் (Amazon) நிறுவனத்திற்கு சொந்தமான ப்ரைம் வீடியோவாகத்தான் (Prime Video) இருக்கும். ஆனால் அமேசான் நிறுவனமோ தனது ப்ரைம் மெம்பர்ஷிப்பின் விலையை அடிக்கடி மாற்றுகிறது!

சில மாதங்களுக்கு முன்பு, அமேசான் நிறுவனமானது மேலதிக சந்தாதாரர்களை ஈர்ப்பதற்காக அதன் ப்ரைம் சந்தாவின் மீது தள்ளுபடி விலைகளை அறிவித்திருந்தது, தற்போது அந்தந்த திட்டங்களின் விலையில் மீண்டும் மாற்றங்களை செய்துள்ளது. ஷாக்கிங் ஆன தகவல் என்னவென்றால் பழைய விலைகளுடன் ஒப்பிடுகையில் புதிய விலைகள் மிகவும் அதிகமாக உள்ளன.

2 Amazon Prime சந்தா திட்டங்களின் மீதும் திடீர் விலை உயர்வு!

இந்தியாவில் இப்போது, அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பின் விலை ரூ.299 முதல் தொடங்குகிறது, இது ஒரு மாத கால சந்தா (1 Month Validity) திட்டத்தின் விலையாகும். நினைவூட்டும் வண்ணம் கடந்த 2021 டிசம்பரில் இதே திட்டத்தின் விலை ரூ.179 ஆக இருந்தது. அதாவது ப்ரைம் வீடியோவின் அடிப்படை திட்டத்தின் மீது ஒட்டுமொத்தமாக ரூ.120 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் (3 Months Validity) அமேசான் ப்ரைமின் காலாண்டு திட்டமானது, தற்போது ரூ.599 க்கு அணுக கிடைக்கிறது. முன்னதாக இது ரூ.459 க்கு கிடைத்தது. அதாவது அமேசான் நிறுவனம் இந்த திட்டத்தின் மீது ரூ.140 விலை உயர்வை அறிவித்துள்ளது.

அமேசானின் இந்த விலை உயர்வு நடவடிக்கையில் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நீண்ட கால திட்டங்களின் விலைகளில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அதாவது 1 ஆண்டு செல்லுபடியுடன் (1 Year Validity) வரும் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பின் வருடாந்திர திட்டத்தின் விலை ரூ.1,499 ஆகவே உள்ளது.

விலையில் மட்டும் தான் மாற்றமா அல்லது நன்மைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை; வழக்கமான நன்மைகளே கிடைக்கும். ப்ரைம் மெம்பர்ஷிப்பின் கீழ் விரைவான டெலிவரி, ப்ரைம் வீடியோ, ப்ரைம் மியூசிக், ப்ரைம் டீல்கள், ப்ரைம் ரீடிங், ப்ரைம் கேமிங் மற்றும் அமேசான் ஃபேமிலிக்கான அணுகல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

அமேசானின் விலை உயர்வு நடவடிக்கை ஒருபக்கம் இருக்க, இந்நிறுவனத்தின் மிக முக்கியமான போட்டியாளரான நெட்பிளிக்ஸ், எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலைகளின் கீழ் அதன் சந்தா திட்டங்களை வழங்குகிறது. நெட்பிளிக்ஸிடம் 4 நான்கு திட்டங்கள் உள்ளன மற்றும் அனைத்துமே அன்லிமிடெட் கன்டென்ட்டிற்கான அணுகலை வழங்குகின்றன.

மேலும் நெட்பிளிக்ஸின் 4 திட்டங்களும் 1 மாத காலம் என்கிற வேலிடிட்டி உடன் வருகின்றன. பேஸிக் பிளான் ஆனது "மொபைல்" (Mobile) என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும். இதன் கீழ் ஒரே நேரத்தில் ஒரு மொபைல் அல்லது ஒரு டேப்லெட் வழியாக நெட்பிளிக்ஸில் உள்ள அனைத்து கன்டென்டையும் பார்க்கலாம்.

அடுத்ததாக ரூ.199 திட்டம் உள்ளது. இது 1 டிவைஸ் வழியாக (டிவி, லேப்டாப், மொபைல் அல்லது டேப்லெட்) எச்டி குவாலிட்டியில் கன்டென்டை பார்க்க அனுமதிக்கும். மூன்றாவதாக உள்ள ரூ.499 திட்டமானது ஃபுல் எச்டி குவாலிட்டியில் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களுக்கான சப்போர்ட்டை வழங்கும். கடைசியாக உள்ள ரூ.649 ஆனது அல்ட்ரா எச்டி குவாலிட்டியில் 4 டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கும்.

Best Mobiles in India

English summary
Price Hike Announced on Amazon Prime Membership Plans in India Check New Price Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X