OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!

|

ஞாபகம் இருக்கிறதா? ஒன்பிளஸ் பிராண்டின் கீழ் கடைசியாக எப்போது ஒரு பிளாக்ஷிப் 'டி' சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆனதென்று?

நிச்சயமாக இருக்கும். ஏனெனில் அந்த ஸ்மார்ட்போனின் பெர்ஃபார்மென்ஸும், பட்டையை கிளப்பிய விற்பனையும் அப்படி!

அது ஒன்பிளஸ் 8டி ஆகும்!

அது ஒன்பிளஸ் 8டி ஆகும்!

ஆம்! ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 9 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 9டி மாடலை "தவிர்த்து விட்டதால்" ஒன்பிளஸ் 8டி தான், கடைசியாக வெளியான பிளாக்ஷிப் 'டி' சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் 8டி மாடலுக்கு கிடைத்த வரவேற்பை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று நம்புகிறோம்.

இந்த ஒரு காரணத்திற்காகவே, இந்த 2022 ஆம் ஆண்டில், ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) திகழ்கிறது.

OnePlus 10 Pro-வை கூட வாங்காமல் வெயிட் செய்யும் ரசிகர்கள்!

OnePlus 10 Pro-வை கூட வாங்காமல் வெயிட் செய்யும் ரசிகர்கள்!

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது உறுதி செய்யப்பட்டதோ, அப்போதில் இருந்தே சில ஒன்பிளஸ் ரசிகர்கள் லேட்டஸ்ட் ஆக வெளியான 10 ப்ரோ மாடலை கூட வாங்காமல் 10டி வரட்டும் என்று பல்லை கடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?

ரசிகர்களின் வெயிட்டிங்-கை

ரசிகர்களின் வெயிட்டிங்-கை "வெறியாக" மாற்றும் விலை நிர்ணயம்!

"இப்போ வருமோ? அப்போ வருமோ?" என்று ஒன்பிளஸ் 10டி-க்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்படி ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அது 10டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த தகவல் ஆகும்.

குறிப்பிட்ட தகவல் அமேசான் லிஸ்டிங் (Amazon Listing) வழியாக நமக்கு கிடைத்துள்ளதால், இதை வெறுமனே ஒரு 'லீக்டு இன்ஃபர்மேஷன்' ஆக எடுத்துக்கொள்ள முடியாது.

எப்போது, என்ன விலைக்கு அறிமுகம் ஆகும்?

எப்போது, என்ன விலைக்கு அறிமுகம் ஆகும்?

ஒன்பிளஸ் 10டி ஆனது, இந்த 2022 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் பிராண்டின் கீழ் அறிமுகமாகும் கடைசி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தும் பல ரெண்டர்கள் மற்றும் லீக் தகவல்கள் இருந்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் "சரியான" வெளியீட்டு தேதி குறித்து எந்த விவரமும் இல்லை.

இருப்பினும் இது இந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் அல்லது வருகிற ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Nothing Phone 1-இன் Nothing Phone 1-இன் "புதிய விலை" விவரம்; ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்!

இதாங்க 10டி விலை.. தவறுதலாக வெளியிட்ட அமேசான்!

இதாங்க 10டி விலை.. தவறுதலாக வெளியிட்ட அமேசான்!

எப்படி பார்த்தாலும் இன்னும் 30 நாட்களுக்குள் வெளியாகி விடும் என்கிற நிலைப்பாட்டில், Amazon UK இணையதளத்தில் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் "தவறுதலாக" பட்டியலிடப்பட்டு, அதன் விலை மற்றும் சில முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

இருப்பினும், அந்த 'லிஸ்டிங்' வெளியான வேகத்தில் நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அது ஸ்க்ரீன்ஷாட் வடிவத்தில் பல லீக்ஸ்டர்களிடம் சிக்கிக்கொண்டது.

(பின் குறிப்பு: இது ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆகும்; 10டி மாடலுடையது என்று தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)

அமேசான் லிஸ்டிங் வழியாக வெளியான OnePlus 10T விலை!

அமேசான் லிஸ்டிங் வழியாக வெளியான OnePlus 10T விலை!

அமேசான் யுகே லிஸ்டிங்கின் படி, 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வழங்கும் 10டி மாடல் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.65,300 க்கு அறிமுகமாகும்.

அதாவது தற்போது வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 10 ப்ரோவின் பேஸிக் வேரியண்ட்டின் அதே விலையில் (கிட்டத்தட்ட) 10டி அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது!

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்காமல் 10டி மாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த 'மேட்டர்' ஒரு தரமான குட் நியூஸ் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

விலை மட்டும் அல்ல, சில முக்கிய அம்சங்களும் சிக்கியது!

விலை மட்டும் அல்ல, சில முக்கிய அம்சங்களும் சிக்கியது!

வெளியான அமேசான் லிஸ்டிங்கின் வழியாக, 10டி மாடல் ஆனது Qualcomm Snapdragon 8+ Gen1 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான ஸ்டோரேஜுடன் வரும் என்பதையும் அறிய முடிகிறது.

மேலும் அதில் FHD+ LTPS AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50MP ட்ரிபிள் கேமரா செட்டப் போன்றவைகளும் காண முடிகிறது.

என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி?

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி?

OnePlus 10T ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பற்றி பேசினால், நாள் முழுக்க பேசலாம். அவ்வளவு லீக்ஸ் உள்ளன.

அதில் கவனிக்கத்தக்க அம்சங்களை பொறுத்தவரை, 6.7-இன்ச் டிஸ்பிளே, இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4800mAh பேட்டரி, 50எம்பி சோனி IMX766 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கூறலாம்.

Photo Courtesy: OnePlus.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
Price Details of OnePlus 10T Mistakenly Revealed by Amazon listing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X