Nothing Phone 1 விலை இவ்ளோ தானா? தம்பி OnePlus.. கொஞ்சம் ஓரமா நில்லு!

|

ஒரு புதிய நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனின் மீது இவ்வளவு எதிர்பார்ப்புகள் எழுந்து இருப்பது இதுவே முதல் முறை! அது நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 1 (Nothing Phone 1) ஆகும்.

இது வருகிற ஜூலை 12 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிலர் இது ஆப்பிள் ஐபோனிற்கு இணையான மாடல் என்று கூறுகிறார்கள், சிலர் ரியல்மி, சியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் போன்களுக்கு இணையானதாக இது இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இதில் எது உண்மை? என்கிற குழப்பத்திற்கான விடையாக ஒரு அட்டகாசமான தகவல் கிடைத்துள்ளது.

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்:

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்:

தற்போது வெளியாகி உள்ள ஒரு லீக் தகவல் ஆனது நத்திங் போன் 1 ஆனது மூன்று வெவ்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும் என்கிற விவரத்தை வெளிப்படுத்தியதோடு சேர்த்து, அதன் விலை நிர்ணயம் குறித்த விவரத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

வெளியான விலை விவரங்களை வைத்து பார்க்கும் போது, நத்திங் போன் 1 ஆனது "வேட்டு வைக்கப்போவது" ஆப்பிள் ஐபோனுன் மாடல்களுக்கும் அல்ல, மற்ற நிறுவனங்களின் பிரீமியம் போன்களுக்கும் அல்ல - ஒன்பிளஸ் நிறுவனத்தின் பல மாடல்களுக்கு தான்!

இப்போது தைரியமாக ப்ரீ-ஆர்டர் செய்யலாம்!

இப்போது தைரியமாக ப்ரீ-ஆர்டர் செய்யலாம்!

நத்திங் நிறுவனம் ஏற்கனவே அதன் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆனது Flipkart வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

PassionateGeekz.com உடன் இணைந்து, Rootmygalaxy.net வெளியிட்டுள்ள நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள், முன்பதிவு செய்தவர்களுக்கு மற்றும் முன்பதிவு செய்ய காத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது. ஏனெனில் இது ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்யாகி உள்ளது.

வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?

அப்போது, நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு தான் வரும்?

அப்போது, நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு தான் வரும்?

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இதன் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.31,300 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.33,000 க்கும் மற்றும் டாப்-ஆஃப்-லைன் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.35,900 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். பிளிப்கார்ட் தவிர்த்து நத்திங் போன் 1 ஆனது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் ஒரு சமீபத்திய அறிக்கை பரிந்துரைக்கிறது.

ரூ.30,000 பட்ஜெட்டிற்கு இது

ரூ.30,000 பட்ஜெட்டிற்கு இது "வொர்த்தான" போன்-ஆ?

அதைப்பற்றிய ஒரு முடிவுக்கு வரும் முன், நத்திங் போன் 1 ஆனது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது, மேலும் என்னென்ன அம்சங்களை பேக் செய்ய வாய்ப்புள்ளது என்பதை பற்றிய தெளிவை நாம் பெற வேண்டும்.

நத்திங் போன் 1 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.55-இன்ச் அளவிலான ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ எஸ்ஒசி, 12ஜிபி வரை LPDDR5 ரேம் ஆகியவற்றை கொண்டிருக்கும் என வதந்திகள் பரவுகிறது.

Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?

கேமராக்கள்?

கேமராக்கள்?

இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை இதில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பேக் செய்யப்படலாம்.

பேட்டரி?

பேட்டரி?

நத்திங் போன் 1 ஆனது 256ஜிபி வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும். மேலும் கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, 5G, 4G LTE, வைஃபை, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை வழங்கும். இதில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கும்.

மேலும் இது டால்பி அட்மோஸ் ஆதரவை கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் வழங்கலாம். சார்ஜிங் டிப்பார்ட்மென்ட்-ஐ பொறுத்தவரை, இது 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுகளை வழங்கலாம்.

ஓஎஸ்?

ஓஎஸ்?

நத்திங் போன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) அடிப்படையாகக் கொண்ட, நிறுவனத்தின் சொந்த நத்திங் ஓஎஸ் (Nothing OS) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கஸ்டம் லான்ச்சர் ஏற்கனவே பீட்டா டெஸ்டிங்கில் உள்ளது.

நாம் மேற்கண்ட அம்சங்களில் பெரும்பாலானவை, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் தான். எனவே எதையுமே மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!

நத்திங் போன் 1-ஐ நம்பி முன்பதிவு செய்யலாமா?

நத்திங் போன் 1-ஐ நம்பி முன்பதிவு செய்யலாமா?

நத்திங் போன் 1 ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. உண்மையிலேயே இது ரூ.30,000 என்கிற பட்ஜெட்டில் பட்சத்தில் அறிமுகமானால் மற்றும் இதுவரை வெளியான லீக்டு அம்சங்கள் 90% உண்மையாகும் பட்சத்தில், நத்திங் போன் 1-ஐ நம்பி, முன்பதிவு செய்யலாம்.

இருப்பினும் இது முற்றிலும் புதிய நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதையும், இது புதிய கஸ்டம் ஓஎஸ்-இன் கீழ் இயங்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நத்திங் நிறுவனத்தின் 'டிரான்ஸ்ப்ரென்ட் டிசைன்" தான் நத்திங் போன் 1 மீதான இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பிற்கு காரணம் என்பதையும், ஆனால் அது டிரான்ஸ்ப்ரென்ட் டிசைன்-ஐ பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Price details of Nothing Phone 1 Leaked ahead of July 12 launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X