Flipkart Big Dussehra Sale.. ஐபோன் 14, பிக்சல் 7ஏ, கேலக்ஸி எஸ்22 உட்பட பல போன்கள் மீது பெரும் விலை குறைப்பு!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை (Flipkart Big Billion Days Sale) தொடர்ந்து பிளிப்கார்ட் பிக் தசரா என்கிற சிறப்பு விற்பனை (Flipkart Big Dussehra Sale) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத சலுகைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனையானது வருகிற அக்டோபர் 29 அன்று முடிவடையும். இந்த விற்பனையில் பஜாஜ் ஃபின்சார்வ் (Bajaj Finserv), கோடாக் பேங்க் (Kotak Bank), ஆர்பிஎல் (RBL) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் (Exchange Offers), நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) கட்டண விருப்பங்கள் மற்றும் பேடிஎம் (Paytm) அடிப்படையிலான சலுகைகளும் அணுக கிடைக்கும். இந்த விற்பனையின் போது ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற பிராண்டுகளின் டாப்-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் (Top End Premium Smartphones) மீது பெரிய அளவிலான விலை குறைப்பு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 (iPhone 14) மாடலானது ரூ.52,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.69,900 ஆகும். இதேபோல ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலானது ரூ.60,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் வெளியீட்டு விலை ரூ.89,900 ஆகும்.

இதேபோல், பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனையின் போது கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும். வங்கி தள்ளுபடிகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போன் இறுதி விலையை ரூ.32,499 ஆக குறைக்கலாம். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.43,999 க்கு அறிமுகமானது.
இதேபோல், ஒப்போ ரெனோ 19 5ஜி (Oppo Reno 10 5G) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் ஆரம்ப விலையான ரூ.38,999 க்கு பதிலாக ரூ. 29,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 34,999 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் வாங்கினால் ரூ 750 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.
மேலும் பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனையின் போது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான சாம்சங்கின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.85,999 க்கு பதிலாக வெறும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்து ரூ.39,150 வரையிலான உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

இதேபோல், 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது பிளிப்கார்ட்டின் இந்த பண்டிகை கால விற்பனையின் போது ரூ.32,999 க்கு (வங்கி தள்ளுபடிகள் உட்பட) வாங்க கிடைக்கும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.8,000 வரையிலான உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.
இதேபோல், போக்கோ எப்5 (Poco F5) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,999 க்கும், விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.21,999 க்கும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+ 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கும், சாம்சங் எப்54 5ஜி (Samsung F54 5G) மாடல் ரூ.23,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








