லேட்டஸ்ட் Redmi Note மாடல் மீது ரூ.2000 விலைக்குறைப்பு! நம்பி வாங்கலாமா, வேண்டாமா?

|

ஒரு காலத்துல எப்படி - கிட்டத்தட்ட - எல்லோருடைய கைகளிலும் நோக்கியா மொபைல்கள் தவழ்ந்தனவோ, தற்போது அந்த இடத்தை ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்கள் நிரப்பி வருகின்றன.

இருந்தாலும் கூட ரெட்மியின் எல்லா மாடல்களுமே தரமான, நல்ல ஸ்மார்ட்போன்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாது. சில மாடல்கள் விலையை மீறிய அம்சங்களை வழங்குகின்றன, சில மாடல்கள் விலைக்கு ஏற்ற அம்சங்களை வழங்குகின்றன, சில மாடல்கள் "எதுக்கு அறிமுகம் ஆச்சுன்னே தெரியலையே?" என்கிற குழப்பத்தை உருவாக்கி விடுகின்றன.

இந்த கதை ரெட்மி நிறுவனத்தில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடமும் உள்ளது. எனவே தான் எந்தவொரு ஸ்மார்ட்போனை வாங்கினாலும் நிதானித்து வாங்க வேண்டும். குறிப்பாக திடீர் ஆபரில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை!

அப்படியான ஒரு சலுகை.. ரெட்மி நோட் 10எஸ் மீது பாய்ந்துள்ளது!

அப்படியான ஒரு சலுகை.. ரெட்மி நோட் 10எஸ் மீது பாய்ந்துள்ளது!

இந்தியாவில் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 வரையிலான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்த மாடல் கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் டிசம்பர் 2021 இல் மூன்றாவது ஸ்டோரேஜ் ஆப்ஷனும் அறிமுகமானது.

இதற்கிடையில் தான், ரெட்மி நோட் 10எஸ் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையயை பயன்படுத்திக்கொள்ளலாமா அல்லது அப்படியே தவிர்த்து விடலாமா? என்பதை பற்றி விரிவாக அறியும் முன், குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து விரிவாக பார்த்து விடுவோம். அப்போது தான் ஒரு சரியான முடிவுக்கு வர முடியும்.

நல்ல டிஸ்பிளே, நேர்மையான பெர்பார்மன்ஸ், போதுமான கேமரா!

நல்ல டிஸ்பிளே, நேர்மையான பெர்பார்மன்ஸ், போதுமான கேமரா!

ரெட்மி நோட் 10எஸ் ஆனது 1,080x2,400 பிக்சல் ரெசல்யூஷன், 1,100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 4,500,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உடனான 6.43-இன்ச் எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது மாலி-ஜி76 MC4 GPU உடனாக ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 SoC மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை பெறுகிறது. முன்பக்கத்தில், 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவானது, டிஸ்பிளேவின் ஹோல்-பஞ்ச் ஸ்டைல் ​​கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord 2T இந்திய விலை நிர்ணயம் இவ்ளோ தானா? எப்போது அறிமுகமாகும்?OnePlus Nord 2T இந்திய விலை நிர்ணயம் இவ்ளோ தானா? எப்போது அறிமுகமாகும்?

கனெக்டிவிட்டி, பேட்டரி லைஃப் - நல்லா இருக்குமா?

கனெக்டிவிட்டி, பேட்டரி லைஃப் - நல்லா இருக்குமா?

கனெக்டிவிட்டி-ஐ பொறுத்தவரை ரெட்மி நோட் 10எஸ் ஆனது 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது.

மேலும் இது ஆம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆக்ஸலரோமீட்டர் போன்ற சென்சார்களையும் பெறுகிறது. பயோமெட்ரிக்ஸுக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

விலைக்குறைப்பிற்கு பின் ரெட்மி நோட் 10எஸ் மாடலின் விலை என்ன?

விலைக்குறைப்பிற்கு பின் ரெட்மி நோட் 10எஸ் மாடலின் விலை என்ன?

6ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தற்போது Mi.com வழியாக ரூ.12,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ. 14,999 என்கிற குறைக்கப்பட்ட விலைக்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.16,499 என்கிற தள்ளுபடி விலைக்கும் வாங்க .கிடைக்கிறது.

வாங்கலாமா? வேண்டாமா?

வாங்கலாமா? வேண்டாமா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், புதிய ப்ராசஸர், அதிக ரேம் மற்றும் ஹை ரெசல்யூஷன் கொண்ட மெயின் கேமராவை உள்ளடக்கிய ரெட்மி நோட் 10எஸ் மாடலை விட ரெட்மி நோட் 10 மாடல் இன்னமும் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாகவே திகழ்கிறது.

ஏனெனில் 'ஒரிஜினல் மாடல்' அறிமுகமான அடுத்த இரண்டு மாதங்களில் 'அப்டேடட் மாடல்' அறிமுகமாகி விட்டது.

கேமராக்கள் மிகவும் முக்கியம் என்றால்.. ரெட்மி நோட் 10எஸ் சரிவராது!

கேமராக்கள் மிகவும் முக்கியம் என்றால்.. ரெட்மி நோட் 10எஸ் சரிவராது!

தற்போது இதன் விலை குறைந்து இருந்தாலும் கூட நோட் 10 மாடலுடன் ஒப்பிடும்போது நோட் 10எஸ் மாடலின் கேமராக்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இருப்பினும், நல்ல பெர்பார்மன்ஸை தேடுபவர்களுக்கு, நோட் 10எஸ் ஒரு நல்ல ஆப்ஷன் ஆக அமையலாம்.

மேலும் நீங்கள் ரெட்மி நோட் 10எஸ் மாடலுக்கான ஆல்டர்நேட்டிவ்வை (மாற்றுகளை) தேடுகிறீர்களானால், ரியல்மி 7 மற்றும் போக்கோ எம்3 போன்ற மாடல்களை கவனத்தில் கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Redmi Note 10S Smartphone gets Price cut in India upto Rs.2000, Check details and Here is our suggestion to buy or not

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X