அண்ணாமலை அணிந்து இருக்கும் வாட்ச் உண்மையாவே ரஃபேல் ஸ்பெஷல் எடிஷனா? இல்ல சுத்தமான உருட்டா?

|

சில தினங்களுக்கு முன்பாக.. ஒரு கைக்கடிகாரமானது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறும் என்று கூறி இருந்தால், உங்களால் சிலர் வாய்விட்டு சிரித்து இருப்பீர்கள். ஆனால் தற்போது அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச்சின் (Rafale Special Edition Watch) உண்மையான விலை என்ன? அது உண்மையாகவே ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கடிகாரம் தானா? போன்ற கேள்விக்கான பதில்கள் கூகுளில் (Google) தேடப்பட்டு வருகிறது!

ஒருவேளை உங்களுக்கும், அரசியலுக்கும் "ரொம்ப தூரம்" என்றால், நாங்கள் இங்கே எதைப்பற்றி பேசுகிறோம்? ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச் என்றால் என்ன? அது ஏன் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது? என்று நீங்கள் குழப்பமடைய வாய்ப்புகள் உண்டு! உண்மையில் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது - தமிழக பாஜக தலைவர் ஆன அண்ணாமலை "ஜி" தான்!

அண்ணாமலையின் வாட்ச்: உண்மையாவே ரஃபேல் ஸ்பெஷல் எடிஷனா? இல்ல உருட்டா?

ஏனென்றால், அண்ணாமலை அணிந்து இருக்கும் கடிகாரத்தின் விலை ரூ.5 லட்சம் ஆகும், நான்கு ஆடுகள் மட்டுமே உள்ளதாக கூறும் ஒருவரின் கையில் இப்படி ஒரு வாட்ச் உள்ளதே! அவர் அந்த கடிகாரத்தின் ரசீதை பகிர்ந்து கொள்ள முடியுமா என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்து இருந்தார். அந்த நேரத்தில் ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச் ஆனது வெறுமனே ஒரு பேசுபொருளாக மட்டுமே இருந்தது; தற்போது அது "தேடுபொருளாகவும்" உருமாறி உள்ளது. அதாவது கூகுளில் தேடும் அளவிற்கு பிரபலமாகி உள்ளது; அதற்கும் அண்ணாமலை (Annamalai) தான் காரணம்!

ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதில் அளிக்கும் நோக்கத்தின் கீழ், "நான் ஒரு தேசியவாதி என்பதால் உயிருடன் இருக்கும் வரை இந்த கடிகாரத்தை அணிந்து கொண்டே தான் இருப்பேன். ஏனென்றால், இது ஒரு ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச் ஆகும். இந்தியா, ரஃபேல் விமானங்களை ஆர்டர் செய்தபோது தயாரிக்கப்பட்டது மற்றும் இந்த கடிகாரத்தில் ரஃபேல் விமானத்தின் பாகங்கள் உள்ளன, ரஃபேல் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காததால், ஒரு தேசியவாதியாக இந்த கடிகாரத்தை நான் எப்போதும் அணிந்து இருப்பேன்" என்று அண்ணாமலை ட்வீட் செய்தார்!

இந்நிலைப்பாட்டில் தான், ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச்சின் விலை என்ன? அது ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதா? போன்ற கேள்விக்கான பதில்கள் தேடப்பட்டு வருகிறது. ஒருவேளை நீங்களும் இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடிக்கொண்டு இருக்கீகிறீர்கள் என்றால்.. ரூ.5 லட்ச ரூபாய்க்கு இந்த வாட்ச்சில் அப்படி என்ன ஸ்பெஷல்? ரஃபேல் போர் விமானத்திற்கும் இந்த வாட்சிற்கும் என்ன தொடர்பு? இதோ பதில்கள்!

ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச் ஆனது ரஃபேல் போர் விமானத்தின் பெருமையை பறைசாற்றும் நோக்கத்தின் கீழ் பெல் & ராஸ் (Bell & Ross) வடிவமைப்பாளர்கள் உருவாக்கப்பட்ட ஒரு கைக்கடிகாரம் ஆகும். புதுமையான, உயர் செயல்திறன் கொண்ட பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட ரஃபேலைப் "போலவே" தான் ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்சும் கூட செராமிக்கை (Ceramic) பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஃபேல் விமானத்தின் பாகங்கள் இந்த வாட்சில் உள்ளது என்பது தொடர்பான சரியான விவரங்கள் எங்கும் இல்லை!

ஆனால் இதில் செராமிக் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை தான்! அறியாதோர்களுக்கு செராமிக் ஆனது விண்வெளி துறையில் (Aerospace sector) பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் ஆகும். ஏனென்றால் இது அதிக வெப்பநிலையை தாங்கும், அமிலங்களின் வெளிப்பாட்டை தாங்கும், அரிப்பை தடுக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமல்ல, ராக்கெட்டுகளுக்கான வெப்பக் கவசங்கள் (Heat shields) மற்றும் "மூக்குகளின்" வடிவமைப்பிலும் கூட இது காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட வைரத்தை போலவே மிகவும் கடினமானதும் கூட!

இந்த வாட்சில் கவனிக்கப்பட வேண்டிய மிகவும் முக்கியமான தொழில்நுட்பம் என்றால், இதில் உள்ள அதிநவீன கேஸ் (Sophisticated Case) தான்! ஏனென்றால், இதில் மெக்கானிக்கல் க்ரோனோகிராஃப் மூவ்மெண்ட் (Mechanical chronograph movement) உடனான ஒரு ஆட்டோமெட்டிக் வைண்டிங் (Automatic winding) உள்ளது. க்ரோனோகிராஃப் என்பது டிஸ்ப்ளே வாட்சுடன் இணைந்து ஸ்டாப்வாட்சாகவும் (Stop Watch) பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட வகை கடிகாரமாகும், இது ஏரியல் நேவிகேஷனில் (Aerial navigation), அதாவது மிகவும் வேகமாக பறக்கும் விமானங்களில் செல்லும் போது, விமானிகளுக்கு தேவைப்படும் மிகவும் முக்கியமான ஒரு கருவி ஆகும்! ஆனால், தரையில் நடப்பவர்களுக்கு இதனால் என்ன பயன் என்று எங்களுக்கு தெரியவில்லை; தெரிந்தவர்கள் கமெண்ட் செக்ஷனில் கூறவும்!

ஆகமொத்தம் ரஃபேல் ஸ்பெஷல் எடிசன் வாட்ச் ஆனது சில தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆகையால் வெறும் 500 ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச் யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் (தற்போதைய) விலை 8400 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.6,94,617 ஆகும்!

Source: Time and tide watches; Photo Courtesy: Bell and Ross

Best Mobiles in India

English summary
Price and Major Specifications Of Rafale Special Edition Watch in The Wrist of BJP Leader Annamalai

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X