இந்திய குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்யும் எ-வியூவ் சாப்ட்வேர்

Posted By: Karthikeyan
இந்திய குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்யும் எ-வியூவ் சாப்ட்வேர்

இந்தியாவின் குடியரசுத் தலைவரான திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் அமிர்தா பல்கலைக்கழகம் வழங்கும் புதிய இ-லேர்னிங் தளத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த புதிய தளத்திற்கு எ-வியூவ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அம்மா அமிர்தானந்த மாயி அவர்களால் தொடங்கப்பட்ட அமிர்தா பல்கலைக்கழகம் இ-லேர்னிங் ஆய்வுக் கூடத்தை நிறுவியது. தற்போது இந்த ஆய்வுக் கூடம் ஆகாஷ் டேப்லெட்டிற்கான ஒரு எ-வியூவ் மொபைல் வெர்சனை அதாவது ஒரு மொபைல் இ-லேர்னிங் தளத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்த இ-லேர்னிங் ப்ரோக்ராம் ஆகாஷ் டேப்லெட்டில் இயங்கும். மேலும் இந்த புதிய ப்ரோக்ராமை அறிமுகம் செய்யும் நாளில் 14,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் 240க்கும் அதிகமான தங்களின் மையங்களிலிருந்தே பங்கெடுப்பார்கள் என்று ஐஐடி பாம்பே தெரிவித்திருக்கிறது.

இந்த அறிமுக விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் வந்திருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்முன் உரையாற்றி இந்த எ-வியூவ் சாப்ட்வேர் அறிமுகம் செய்து வைப்பார்.

இந்த எ-வியூவ் சாப்ட்வேர் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு உறுதியான பாலமாக இருக்கும் என்று அமிர்தா இ-லேர்னிங் ரிசர்ஸ் லேபின் தலைவர் கமல் பிஜிலனி தெரிவித்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot