Home
News

வங்கி கணக்கு, சிம் கார்டுக்கு ஆதார் சிக்கல்-குடியரசு தலைவர் தீர்வு.!

ஆனால், பொது மக்களிடம் வங்கி கணக்கு, சிம் கார்டு உள்ளிட்டவைகளுக்கும் தேவையா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது. Presidents nod to ordinance for voluntary use of Aadhaar as ID proof for bank a/c SIM

வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியமானதாக கருத்தப்பட்டு வந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றமும் அரசு சலுகைகளுக்கு மட்டும் ஆதார் கார்டுகளை கொடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

வங்கி கணக்கு, சிம் கார்டுக்கு  ஆதார் சிக்கல்-குடியரசு தலைவர் தீர்வு.!

ஆனால், பொது மக்களிடம் வங்கி கணக்கு, சிம் கார்டு உள்ளிட்டவைகளுக்கும் தேவையா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், குடியரசு தலைவர் இதுகுறித்து அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து காணலாம்.

ஆதார் கார்டு :

ஆதார் கார்டு :

ஆதார் கார்டு தற்போது அரசு துறைகளுக்கு முக்கியமான ஆதாரமாக பயன்படுத்தப்படுகின்றது. அரசு சலுகைகளுக்கும் ஆதார் கார்டு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதாரை தற்போது அனைத்து தரப்பினரும் பரவலாக பயன்படுத்த வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

ஆதார் கார்டு அரசு சலுகைகளுக்கு மட்டும் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், தனியார் துறைகள் பயன்படுத்த கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது. பள்ளிகளின் சேர்கை உள்ளிட்டவைகளுக்கும் பயன்படுத்த கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது.

வங்கி கணக்கு, சிம் கார்டு:

வங்கி கணக்கு, சிம் கார்டு:

வங்கி கணக்கு துவங்க மற்றும் சிம்கார்டு பெற ஆதாரை வங்கிகளும், தொலைபேசி நிறுவனங்களும் கட்டாயமாக்கி வந்தன. இதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், பொது மக்கள் சிம்கார்டு, வங்கி கணக்கு துவங்கவும் ஆதாரை பயன்படுத்தி வந்தனர்.
ஒரு சில இடங்களில் இதுகுறித்து குழப்பமான சூழ்நிலையும் நிலவியது. இதனால் பிரச்னைகளும் ஏற்பட்டது. இதற்கு அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

அவசர சட்டத்திற்கு ஒப்புதல்:

அவசர சட்டத்திற்கு ஒப்புதல்:

இந்நிலையில், வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

சுய விருப்ப தேர்வு:

சுய விருப்ப தேர்வு:

அவசர சட்டத்திற்கு ஒப்புதல்: நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது. இதற்கிடையே, வங்கி கணக்கு மற்றும் செல்போன் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை சுய விருப்பத்தின் அடிப்படையில் இணைப்பதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அவசர சட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குடியரசு தலைவர் ஒப்புதல்:

குடியரசு தலைவர் ஒப்புதல்:

இந்த அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், சிம்கார்டு பெறவும், வங்கி கணக்குத் தொடங்கவும், ஆதார் எண்ணை, சுய விருப்பத்தின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Presidents nod to ordinance for voluntary use of Aadhaar as ID proof for bank a/c SIM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X