Home
News

iPhone-க்கு டிரம்ப் வைத்த ஆப்பு.. குதிரை கொம்பாக விலை உயரும் ஐபோன்கள்.. 2 லட்சம் விலையா? என்ன காரணம்?

உங்களிடம் ஐபோன் (iPhone) இருக்கிறதா? அல்லது புதிதாக ஐபோன் வாங்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறதா? அப்படியானால், கண்டிப்பாக இந்த செய்தியை நீங்கள் முழுமையாக படிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட புதிய விதிகளின் படி, மிக விரைவில் ஐபோன் சாதனங்களின் விலை கடுமையாக உயரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்ல போனால், வரும் காலத்தில் ஒரு புது ஐபோன் சாதனத்தை வாங்க நீங்கள் 2,00,000 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தொடர்ப்பன முழு விபரம் இதோ.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) சமீபத்தில் பல நாடுகளைப் பாதிக்கும் புதிய பரஸ்பர கட்டணங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த புதிய கட்டணங்கள் காரணமாக, இனி வரும் காலத்தில் விரைவில் ஐபோன்களின் விலை கணிசமாக உயர அதிக வாய்ப்புள்ளதாக (iPhone price hike) தெரிகிறது. உங்களிடம் ஒரு ஐபோன் இருக்கிறதென்றலோ அல்லது புதிதாக ஒரு ஐபோனை நீங்கள் வாங்க திட்டமிட்டாலோ (planning to buy new iPhone), இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

iPhone-க்கு டிரம்ப் வைத்த ஆப்பு.. குதிரை கொம்பாக விலை உயரும் ஐபோன்கள்

iPhone-க்கு டிரம்ப் வைத்த ஆப்பு.. குதிரை கொம்பாக விலை உயரும் ஐபோன்கள்:

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக சீனா (China) உள்ளது. தற்போது அமெரிக்கா (America) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரியை விதித்துள்ளது. சமீபத்தில், டிரம்ப் நிர்வாகம் கூடுதலாக 34 சதவீத வரியைச் சேர்த்தது, இது ஐபோன் விலைகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இந்த கட்டணங்கள் நடைமுறையில் இருந்தால், எதிர்காலத்தில் ஐபோன் விலைகள் $2,000 விலைக்கு மேல் உயரக்கூடும் (price hike iPhones expected) என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஐபோன்களின் விலை உயர்வுக்கான வாய்ப்பு கணிசமாக உள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, ஐபோன் 16 (iPhone 16) இன் அடிப்படை மாடலின் விலை தற்போது அமெரிக்காவில் $799 ஆக உள்ளது. ஆனால், இது 43 சதவீதம் வரை அதிகரித்து, விலை $1,142 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது $1,599 விலைக்கு விற்கப்படும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) விரைவில் விலை அதிகரித்து சுமார் $2,300 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ. 2 லட்சம் வரை iPhone-களின் விலை உயருமா? விரக்தியில் ஐபோன் ரசிகர்கள்:

இந்திய மதிப்பில், இது ரூ. 2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, டிரம்ப் (Trump) தனது முந்தைய பதவிக் காலத்தில் சீனா மீதும் வரிகளை விதித்தார். ஆனால், அந்த நேரத்தில் ஆப்பிளுக்கு சில நிவாரணங்களை வழங்கினார். இருப்பினும், இந்த முறை நிலைமை வேறுபட்டது. இந்த புதிய வரிகள் தொடர்ந்தால், ஆப்பிள் ஐபோன் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கும்.

ஒருவேளை ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் சாதனங்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று முடிவு செய்தால், அதிகரிக்கும் செலவுகளை நிறுவனமே ஏற்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை அதிகரிப்பு ஆப்பிள் பயனர்களுக்கு பதிலாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது விழும். இந்த விலை ஏற்றத்தை ஆப்பிள் முழுமையாக தானே ஏற்றுக்கொள்ளும் என்பது நடக்காத காரியம். இந்த புதிய விலை அதிகரிப்பு எப்படியும் ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) பயனர்களின் தலையில் இறக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. புதிய கட்டணங்கள் அமலில் இருப்பதால், அமெரிக்காவில் ஐபோன்களின் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண அறிவிப்புக்கு முன்னதாகவே, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி (Import) செய்யப்படும் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் சேமித்து (storage) வைத்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, அதனால்தான் சந்தையில் உடனடி விலை உயர்வை நாம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
President Donald Trump Announced New Reciprocal Tariff May Rise Price Of iPhone In Many Countries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X