Home
News

நாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.?

யார் சிறந்த விலையில் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறார்கள் என்கிற போட்டி; யார் பெஸ்ட்.? என்கிற போட்டி.!

By Muthuraj

இரண்டு நாட்களுக்கு முன்னர், நுகர்வோர் மற்றும் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற மற்ற டெலிகாம் நிறுவங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் மீது கூடுதல் டேட்டாவை வழங்குவதற்கான புதிய டபுள் டமாக்கா வாய்ப்பை அறிவித்தது.

இந்த வாய்ப்பின் கீழ் அதன் ரூ.300/-க்கு மேற்பட்ட ரீசார்ஜ்களுக்கு ரூ.100/- தள்ளுபடியும், அதற்கு கீழான ரீசார்ஜ் திட்டங்களுக்கு 20% தள்ளுபடியும் மற்றும் அனைத்து திட்டங்களுக்கும் 1.5ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவும் கிடைக்கும். இங்கு தான் 3ஜிபி டேட்டா பேக்குகளுக்கு இடையேயான கட்டண யுத்தம் தொடங்குகிறது. அதாவது யார் சிறந்த விலையில் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறார்கள் என்கிற போட்டி; யார் பெஸ்ட்.? என்கிற போட்டி.!

இந்த திட்டத்தின் கீழ் 4.5ஜிபி பெற.!

இந்த திட்டத்தின் கீழ் 4.5ஜிபி பெற.!

நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்கி வரும் ரூ.299/- ஆனது ஜியோவின் டபுள் டமாக்காவின் கீழ் ரீசார்ஜ் செய்ய, கூடுதலாக 1.5ஜிபி என நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தவிர ரீசார்ஜ் செய்யும் தொகையில் 20 சதவீத தள்ளுபடி பெற்று, இறுதி விலையானது ரூ.239/- என்றாகும். மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியநன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 4.5ஜிபி பெற, ஜூன் 12 - ஜூன் 30 க்கு இடையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

20% தள்ளுபடி உண்டு.!

20% தள்ளுபடி உண்டு.!

இது தவிர நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களாக ரூ.149, ரூ.349, ரூ.399, மற்றும் ரூ.449/- ஆகியவைகள் ஜியோ வரிசையில் உள்ளன. நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் ரூ.149 பேக் ஆனது புதிய டபுள் டமாக்கா வாய்ப்பின் கீழ் கூடுதலாக 1.5ஜிபி வழங்கி மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை தினமும் வழங்கும். இதற்கும் 20% தள்ளுபடி உண்டு என்பதால், இதன் இறுதி விலை ரூ.120/- என்றாகும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும்.!

ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும்.!

மறுகையில் உள்ள ரூ.300/-க்கு மேற்பட்ட திட்டங்களில் (ஜியோ டபுள் டமாக்கா வாய்ப்பின் விதிகளின் படி) ஒவ்வொரு ரீசார்ஜ் கட்டணத்திற்கும் ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும். மைஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் போது, ரூ.50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும். இந்த தள்ளுபடி பணமானது வாடிக்கையாளரின் PhonePe கணக்கில் சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 84 நாட்களுக்கும் தினசரி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோ ரூ.399/- ப்ரீபெய்ட் பேக் ஆனது இப்போது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதோடு சேர்த்து ரூ.299/-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்.!

ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்.!

சந்தையில் அதிகரித்துவரும் போட்டியைப் பார்த்து, ​​ஏர்டெல் அதன் திட்டங்களில் பல திருத்தங்களை செய்துள்ளது. அதில் ஒன்று தான் ரூ.349/- ப்ரீபெய்ட் பேக். இப்போது இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்.!

ஏர்டெல் ரூ.558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்.!

இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் ரூ.558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை தேர்வு செய்யலாம். இது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடி 82 நாட்கள் ஆகும். டேட்டாவுடன் சேர்த்து, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. உடன் ஜியோவைப் போலவே, ஆப்ஸ் நன்மைகளும் அதன் வழியிலான வின்க் மியூசிக் சந்தாவும் அணுக கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் ஐடியா திட்டம்.!

ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் ஐடியா திட்டம்.!

ஆதித்யா பிர்லாவின் சொந்தமான டெலிகாம் நிறுவனமும் புதிய மற்றும் கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வெளியிடுவதில் வெகு தொலைவில் இல்லை. இதன் ரூ.349/- ஆனது நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியானது 28 நாட்கள் ஆகும். மேலும் இது வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் போன்ற பிற நலன்களையும் கொண்டுள்ளது.

ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் வோடபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் வோடபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

வோடாபோனை பொறுத்தவரை, ரூ.349/- மற்றும் ரூ.569/- என்கிற இரண்டு 3ஜிபி டேட்டா பேக் கிடைகின்றன. அவைகள் முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. டேட்டா நன்மைகளை தவிர்த்து, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் போன்றவற்றையும் வழங்குகிறது. உடன் வோடபோன் ப்ளே பயன்பாட்டின் லைவ் டிவிக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Prepaid Plans With 3GB Daily Data from Top Four Telecom Operators Compared. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X