ரூ.50-க்குள் சிறந்த சலுகைகளை வழங்கும் ஏர்டெல், வோடோ, ஜியோ.!
ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜனவரி 26, 2018 அன்று ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி எப்யுபி டேட்டா வழங்கப்படுகிறது.
தற்சமயம் டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது,குறிப்பாக வோடபோன், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.50-க்குள் வோடபோன், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஜியோ அறிவித்த ரூ.49 திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜனவரி 26, 2018 அன்று ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி எப்யுபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும்வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 50எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என ஜியோ நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடாபோன்:
வோடாபோன் நிறுவனம் பொறுத்தவரை ரூ.47 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 500எம்பி வரை டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இலவச உள்ளூர்,எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 50எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என ஜியோ நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்:
ஏர்டெல் ரூ.49 திட்டத்தில் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இந்த திட்டத்தை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ஏர்டெல் ரூ.9 திட்டத்திர் வாடிக்கையாளர்களுக்கு 100எம்பி டேட்டா இலவச கால் அழைப்புகள் போன்றவை ஒரு நாள் பயன்படும் வகையில் உள்ளது.

ஏர்டெல் ரூ.23 திட்டம்:
ஏர்டெல் ரூ18 திட்டத்தில் 100எம்பி டேட்டா இலவச கால் அழைப்புகளை 2நாட்கள் பயன்படுத்த முடியும், அதேபோல் ரூ.23 திட்டத்தில் 200எம்பி டேட்டா, 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகளை 2நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் ஏர்டெல் ரூ.29 திட்டத்தில் 150எம்பி டேட்டவை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications