இன்னும் இவ்ளோ இருக்கா? ப்ரீமியமாகும் 2022- வரிசைக் கட்டும் Oneplus, Xiaomi, Apple!

|

Xiaomi 12S சீரிஸ் ஆனது ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. அதே நேரத்தில் iPhone 14 சீரிஸ் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இது மட்டுமின்றி OnePlus, Motorola, Nothing மற்றும் iQOO நிறுவனங்களின் சாதனங்களும் அறிமுகத்துக்கு வரிசைக் கட்டி நிற்கிறது. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ப்ரீமியம் சாதனங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

வரிசைக்கட்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

வரிசைக்கட்டும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

புதிய பிரத்யே A16 பயோனிக் சிப் உடன் iPhone 14, சமீபத்தில் அறிமுகமான Snapdragon 8+ Gen 1 SoC உடன் சியோமி 12 எஸ் என ஒவ்வொரு சாதனங்களும் பிரத்யேக அம்சத்துடன் தனித்தனியாக எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி 5ஜி ஆதரவோடு வரும் ஒன்பிளஸ் 10டி, சமீப தினங்களில் பேசு பொருளாக இருக்கும் நத்திங் போன் 1 என பல சாதனங்கள் அறிமுகமாக இருக்கின்றன. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?.

முதன்மை தர அம்சங்களோடு இத்தனை சாதனங்களா?

முதன்மை தர அம்சங்களோடு இத்தனை சாதனங்களா?

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், ரியல்மி, விவோ, ஐக்யூ போன்ற நிறுவனங்களில் இருந்து பல முதன்மை ஸ்மாரட்போன்கள் வெளியாகின. முதன்மை தர அம்சங்களோடு பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் குவால்காம் மற்றும் மீடியாடெக்கின் புதிய ஃப்ளாக்ஷிப் எஸ்ஓசி சிப்செட்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சிப்செட் ஆதரவுகளோடு கூடிய பல ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாக இருக்கிறது.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஐபோன் 14

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஐபோன் 14

புதிய மற்றும் மேம்பட்ட ஆதரவு கொண்ட A16 சிப்செட் உடன் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதில் ப்ரீமியம் மற்றும் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

Xiaomi 12S சீரிஸ்

Xiaomi 12S சீரிஸ்

சியோமி 12எஸ் ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. நிறுவனம் இந்த தொடரின் கீழ் மூன்று ப்ரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அது சியோமி 12எஸ், சியோமி 12எஸ் ப்ரோ மற்றும் சியோமி 12எஸ் அல்ட்ரா ஆகும். இந்த தொடரில் Leica-டியூன் செய்யப்பட்ட கேமரா சென்சார்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் மிகவும் ப்ரீமியம் சாதனமாக Xiaomi 12S Ultra இருக்கிறது. இந்த சாதனமானது 1 இன்ச் சோனி IMX989 பிரதான கேமரா கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய சிப்செட் ஆதரவு

சமீபத்திய சிப்செட் ஆதரவு

இந்த தொடரில் வரும் மூன்று சியோமி ஸ்மார்ட்போன்களும் சமீபத்திய Snapdragon 8+ Gen 1 SoC பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் சியோமி 12எஸ் ப்ரோ ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ SoC உடன் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனங்கள் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் Iphone 14 சீரிஸ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் Iphone 14 சீரிஸ்

ஐபோன் 14 சீரிஸ் ஆனது நான்கு மாடல்கள் உடன் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தில் ப்ரீமியம் ஐபோன் 14 மேக்ஸ், ப்ரோ மற்றும் ஐபோன் 13 வடிவமைப்பைக் கொண்ட இரண்டு ஐபோன் 14 மாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் ஏ15 பயோனிக் சிப் ஆதரவோடு டூயல் பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 13 அறிமுகமா?

செப்டம்பர் 13 அறிமுகமா?

முந்தைய ஐபோன் மாடல்களைவிட ஐபோன் 14 பெரிய மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் பிரத்யேக ஏ16 பயோனிக் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்பது இதன்மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஐபோன் 14 மினி இந்த தொடரில் இடம்பெறாது என வதந்தித் தகவல்கள் தெரிவிக்கிறது. செப்டம்பர் 13 நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் நிகழ்வில் இந்த சாதனம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்யேகத்திற்கு புகழ்பெற்ற OnePlus ஸ்மார்ட்போன்

பிரத்யேகத்திற்கு புகழ்பெற்ற OnePlus ஸ்மார்ட்போன்

அடுத்ததாக ப்ரீமியம் சாதனங்களுக்கு புகழ் பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை தான் பார்க்கப் போகிறோம். OnePlus 10T 5G ஆனது 10 சீரிஸில் வரும் புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனானது OnePlus 10R மற்றும் OnePlus 10 Pro க்கு இடையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

இதுவும் அதே சிப்செட் ஆதரவுதான்

இதுவும் அதே சிப்செட் ஆதரவுதான்

கசிந்த தகவலின்படி, ஒன்பிளஸ் 10டி 5ஜி ஆனது 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மற்றும் 50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது சமீபத்திய மேம்பட்ட சிப்செட் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. OnePlus 10T 5G ஆனது Hasselblad பிராண்டிங் ஆக இருக்கும். இதில் 4800 Ah பேட்டரி மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும் என கூறப்படும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

களமிறங்கும் Motorola நிறுவனம்

களமிறங்கும் Motorola நிறுவனம்

Motorola Edge 30 Ultra சாதனத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இருக்கிறது. அதாவது இந்த சாதனத்தின் பின்புறத்தில் 200 எம்பி டிரிபிள் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனமும் புதிய ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC மற்றும் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 60 எம்பி செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி, 6.8-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே இதில் இருக்கும். இந்த சாதனம் ஜூலை 2022 இல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போட்டிக்கு தயாரான ஐக்யூ

போட்டிக்கு தயாரான ஐக்யூ

iQOO 9 தொடரின் சமீபத்திய புது சாதனமாக iQOO 9T அறிமுகமாக இருக்கிறது. இந்த சாதனம் ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ சாதனத்துக்கு இடையிலான அம்சங்களை கொண்டிருக்கும். இதன் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்திருக்கிறது. தகவலின்படி இது Snapdragon 8+ Gen 1 SoC, 6.78-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும். இந்த சாதனத்தின் இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் ஜூலை மாதம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோனுக்கு போட்டியாம்

ஐபோனுக்கு போட்டியாம்

சமீப தினங்களாக பெரும் பேசு பொருளாக இருக்கும் சாதனம் Nothing Phone (1) ஆகும். இது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன். ஐபோனுக்கு போட்டியாக இந்த சாதனம் களமிறங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 என்ற விலைப் பிரிவில் அறிமுகமாகலாம். இது ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Premium smartphones lined up for launch in 2022: Apple, Oneplus, Xiaomi in List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X