திரைப்படம் ஹிட் / ஃப்ளாப்..? முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்..!!

By Meganathan

எங்கும் தொழில்நுட்பம், எதிலும் செயலிகள் என்றாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில், எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் முறை வேகமாக வளர்ந்து வருகின்றது எனலாம். உடனே நம்ம ஊரு ரமணனை நினைக்க வேண்டாம், விஞ்ஞானம் இன்று எங்கோ போய் கொண்டிருக்கின்றது, எங்கடா போய்டிருக்குனு கேட்காதீங்க ப்ளீஸ்..

'விண்டோஸ் 10' - ஏன் டா ஏன்..?

கதை சொன்னால் படம் ஓடுமா ஓடாதா என்று கூட சொல்ல முடியும் என்கின்றது இஸ்ரேல் நாட்டின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம். என்ன கதை உடுறியானு கேட்காம, கீழ் வரும் ஸ்லைடர்களை பார்த்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..

ஹாலிவுட்

ஹாலிவுட்

பல திரைப்பட கல்லூரிகளிலும் ஹாலிவுட் திரைக்கதைகளை மாணவர்களுக்கு புரிய வைக்க பயன்படுத்துகின்றனர்.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

தற்சமயம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் திரைக்கதையை மையமாக கொண்டு புதிய கருவியை தயாரித்திருக்கின்றது.

வால்ட்

வால்ட்

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான வால்ட் தயாரித்திருக்கும் ப்ரோகிராம் திரைக்கதையை கொண்டு படம் வெற்றி பெறுமா அல்லது But how?

டேவிட் ஸ்டிஃப்
 

டேவிட் ஸ்டிஃப்

வால்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ஸ்டிஃப் வால்ட் அதிகபட்சம் 300,000 முதல் 400,000 திரைக்கதைகளை ஆய்வு செய்து பரிசீலனை செய்யும் என்று தெரிவித்திருக்கின்றார்.

மென்பொருள்

மென்பொருள்

வால்டில் இருக்கும் அனைத்து கதைகளும் ப்ரோகிராம் மூலம் மட்டுமே எடுக்கப்பட்டதாக டேவிட் தெரிவிக்கின்றார்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

1980களில் துவங்கி பல ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் வால்ட் பயிற்சியளிக்கப்பட்டதோடு தனது குழு கதைகளை ஆய்வு செய்து பாக்ஸ் ஆபிஸ் தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டதாகவும் டேவிட் தெரிவிக்கின்றார்.

சதவீதம்

சதவீதம்

டேவிட் ஸ்டிஃப் தனது கணக்கின் படி திரைப்படத்தின் வெற்றி தோல்விகளை அதிகபட்சம் 65 முதல் 70 சதவீதம் வரை சரியாக கணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அடிப்படை

அடிப்படை

தனது கணக்கு முழவதும் கதையின் கருவினை மட்டும் அதிகம் சார்ந்திருப்பதாக டேவிட் தெரிவித்தார்.

தயாரிப்பு

தயாரிப்பு

இந்த மென்பொருள் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

எதிர்காலம்

எதிர்காலம்

தற்சமயம் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும் வால்ட் இந்திய சந்தையில் விரைவில் எதிர்பார்க்கப்படுவதோடு, இக்கருவி வெற்றி பெற்றால் எதிர்கால திரையுலகம் மென்பொருள் சாந்திருக்கு நேரிடுமோ என்பதே இளம் இயக்குநர்களின் கேள்வியாக இருக்கும்.

 
Read more about:
English summary
This company uses artificial intelligence to predict whether a Hollywood film will be a hit or a flop - just by scanning the script
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X