Home
News

கேபிள் டிவி சேப்டர் க்ளோஸ்.. 12 மொழிகளில் FREE ஆக 65 சேனல்கள், ரேடியோ ஸ்ட்ரீமிங்.. பிரசார் பாரதி OTT அறிமுகம்!

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பப்ளிக் பிராட்காஸ்டர் (Public broadcaster,) ஆன பிரசார் பாரதி (Prasar Bharati) தனது ஓடிடி (OTT) தளத்தை அறிமுகம் செய்துள்ளது. வேவ்ஸ் (Waves) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தளம் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அறிமுகம் செய்யப்பட்டது

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் (Doordarshan) ஓடிடி இயங்குதளத்தில் இறங்கியுள்ளதாக இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (Ministry of Information and Broadcasting of India) அறிவித்துள்ளது.

12 மொழிகளில் FREE ஆக 65 சேனல்கள்.. பிரசார் பாரதி OTT அறிமுகம்!

மேலும் பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளமானது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை நவீன ஸ்ட்ரீமிங்குடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இது சமகால நிகழ்ச்சிகளுடன் ராமாயணம், மகாபாரதம், சக்திமான் மற்றும் ஹம் லாக் போன்ற கிளாசிக் நிகழ்ச்சிகளின் கலவையை வழங்கும் என்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளத்தில் 12 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளின் கீழ் கன்டென்ட் அணுக கிடைக்கிறது. அவைகள் - தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் அஸ்ஸாமி ஆகிய மொழிகளும் அடக்கம்.

மேலும் இந்த ஓடிடி இயங்குதளமானது 10 வகையான இன்ஃபோடெயின்மென்ட் வகைகளை கொண்டுள்ளது மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட், இலவச கேமிங், ரேடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி ஸ்ட்ரீமிங், 65 லைவ் சேனல்கள், வீடியோ மற்றும் கேமிங் கன்டென்ட்டிற்கான பல இன்-ஆப் ஒருங்கிணைப்புகளை வழங்குகிறது.

மிகவும் சுவாரசியமாக பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளமானது ஆன்லைன் ஷாப்பிங்கையும் கூட வழங்குகிறது. இது டிஜிட்டல் வர்த்தகத்திற்கான, ஓஎன்டிசி (ONDC) என்று சுருக்கமாக அழைக்கப்படமும் ஓப்பன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (Open Network for Digital Commerce) ஆதரவு கொண்ட இகாமர்ஸ் பிளாட்பாரம் வழியாக அணுக கிடைக்கும்.

எல்லாவற்றை விட முக்கியமாக, வேவ்ஸ் அதன் தளத்தை, தேசிய படைப்பாளர் விருது பெற்றவர்கள் உட்பட கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு திறந்து விட்டுள்ளது. மேலும் எப்டிஐஐ (FTII), அன்னபூர்ணா மற்றும் ஏஏஎப்டி (AAFT) போன்ற திரைப்பட மற்றும் ஊடக கல்லூரி மாணவர்களின் பட்டப்படிப்பு படங்களுக்கும் வேவ்ஸ் அதன் போர்ட்டலை திறந்துள்ளது. ஐஎப்எப்ஐ-ன் ஒரு பகுதியாக இருப்பதால், இது ரோல் நம்பர் 52, ஃபௌஜி 2.0 மற்றும் ஜாக்சன் ஹால்ட் போன்ற படங்களையும் காட்சிப்படுத்துகிறது.

மத்திய அரசின் அமைச்சகங்களும், மாநில அரசுகளும் கூட பிரசார் பாரதியுடன் இணைந்து ஆவண நாடகங்கள், நாடகமாக்கப்பட்ட அல்லது கற்பனையான நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மிக்க ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட பல்வேறு கன்டென்ட்களை உருவாக்கி தத்தம் பங்களிப்பை செய்யவுள்ளன.

கோவாவில் நடைபெற்ற 55வது சர்வதேச திரைப்பட விழாவில், வேவ்ஸ் ஓடிடி மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும் போது, ​​"நேஷனல் பிராட்காட்ஸ்டர் ஆக, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் க்ளீன் ஆன குடும்ப பொழுதுபோக்கை வழங்குவதே எங்கள் கடமை ஆகும்" என்று பிரசார் பாரதியின் தலைவர் ஆன நவ்நீத் குமார் சேகல் கூறினார்.

மேலும் செய்திகள், விளையாட்டுகள், நடப்பு நிகழ்வுகள் தவிர, இந்திய குடிமக்களுக்கு இன்னும் பல விஷயங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் வேவ்ஸ் ஓடிடி ஆனது - சில முதன்மையான கன்டென்ட்களை (premier contents) தவிர - மற்ற எல்லா கன்டென்ட்களும் எந்த கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக அணுக கிடைக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Best Mobiles in India

English summary
Prasar Bharati Waves OTT Platform 12 Languages 65 Live Channels Free to Use Except Premier content
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X