நிலவில் 'பிரக்யான் ரோவர்' ஆராய்ச்சியைத் துவங்க வாய்ப்புள்ளது! இஸ்ரோவின் அடுத்த முயற்சி!

|

நிலவின் தென்துருவதில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், எதிர்பாராத விதமாகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுக் காணாமல் போனது. காணாமல் போன விக்ரம் லேண்டரை இஸ்ரோ தற்பொழுது கண்டுபிடித்துள்ளது.

தொடர்பிலிருந்து காணாமல் போன விக்ரம் லேண்டர்

தொடர்பிலிருந்து காணாமல் போன விக்ரம் லேண்டர்

நிலவிற்கு மிக அருகில் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் தொடர்பிலிருந்துள்ளது. அதன்பின் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரியாமல் இஸ்ரோ குழம்பி வந்தது. லேண்டருடன் தொடர்பை இழந்தாலும், ஆர்பிட்டர் மூலம் நிலவின் ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

 இஸ்ரோவின் முயற்சி வீண் போகவில்லை

இஸ்ரோவின் முயற்சி வீண் போகவில்லை

அதேசமயம் விக்ரம் லேண்டரை தேடிக் கண்டுபிடித்து, தொடர்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்கான அனைத்து முயற்சியையும் இஸ்ரோ தீவிரமாகச் செய்து வந்தது. இஸ்ரோவின் முதல் முயற்சி வீண் போகவில்லை, ஆர்பிட்டரின் உதவியுடன் தெர்மல் இமேஜிங் முறைப்படி லேண்டர் இருக்கும் இடம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலவில் ஜெல் போன்ற பொருளை கண்டுபிடித்த சீனாவின் சேன்ஜ் 4 லேண்டர்!நிலவில் ஜெல் போன்ற பொருளை கண்டுபிடித்த சீனாவின் சேன்ஜ் 4 லேண்டர்!

தெர்மல் இமேஜ் கேமரா மூலம் கண்டுபிடிப்பு

தெர்மல் இமேஜ் கேமரா மூலம் கண்டுபிடிப்பு

நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை மேலே இருந்து படம் பிடித்து, இஸ்ரோ தளத்திற்கு அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தெர்மல் இமேஜ் கேமராவை பயன்படுத்தி உள்ளனர். இந்த கேமரா இருள் மற்றும் அதிக வெளிச்சத்தில் படம் பிடிக்கக் கூடிய திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்!மிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்!

சாஃப்ட் லேண்டிங்கிற்கு வாய்ப்புள்ளது

சாஃப்ட் லேண்டிங்கிற்கு வாய்ப்புள்ளது

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க வேண்டிய இடத்திலிருந்து விக்ரம் லேண்டர், சுமார் 500 மீட்டர் தள்ளி இறங்கி இருக்கிறது. விக்ரம் லேண்டர் சென்ற கடைசி நேர வேகம் காரணமாக. நிலவில் கண்டிப்பாக விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் விக்ரம் லேண்டருக்கு எந்த விதமான சேதாரமும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

மலிவு விலை: 40இன்ச் சியோமி முதல் பால்கான் வரை கிடைக்கும் டிவிகள்.!மலிவு விலை: 40இன்ச் சியோமி முதல் பால்கான் வரை கிடைக்கும் டிவிகள்.!

மீண்டும் ரோவர் ஆராய்ச்சிக்கு வாய்ப்புள்ளது

மீண்டும் ரோவர் ஆராய்ச்சிக்கு வாய்ப்புள்ளது

கண்டுபிடிக்கப்பட்டுள்ள லேண்டர் உடன் தொடர்புகொள்ள இஸ்ரோ தற்பொழுது முயன்று வருகிறது. தொடர்பு கிடைத்தால் நிச்சயம் மீண்டும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சியைத் துவங்க வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் எடுத்துள்ள விக்ரம் லேண்டர் இன் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Pragyaan Rover May Again Start Its Research On Moon ISRO's next attempt : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X