50எம்பி ரியர் கேமரா, சிங்கிள் சார்ஜில் 3 நாள் பேட்டரி.. புதிய Nokia போன் இந்தியாவில் அறிமுகம்.! கம்மி விலை
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ச்சியாக 4ஜி நோக்கியா போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் ஒரு சில 5ஜி போன்களை அறிமுகம் செய்தாலும், அதிகமாக 4ஜி போன்களை அறிமுகம் செய்கிறது.
இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் மீண்டும் ஒரு 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கம்மி விலையில். அதாவது தற்போது நோக்கியா சி32 4ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.55-இன்ச் எசிடி பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் நோக்கியா சி32 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா சி32 போன் சிறந்த செயல்திறன் வழங்கும்.
புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைகரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏச் பேட்டரி வசதியுடன் இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.
தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் மாடல்.
சார்கோல், பிரேஸி மிண்ட் மற்றும் பீச் பிங்க் நிறங்களில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். குறிப்பாக 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி32 போனின விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. தற்போது ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் நோக்கியா.காம் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். ஜியோ சார்பில் இந்த நோக்கியா போனுக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








