Jio, Airtel கஸ்டமர்கள் தலையில் அடுத்த இடி.. போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை உயர்வு.. எப்போது அமல்?
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய இரண்டுமே ஏற்கனவே தங்கள் ப்ரீபெய்ட் சேவைகளின் மீது "மறைமுகமான விலை உயர்வை" கட்டவிழ்த்து விட்டுள்ளன. இவ்விரு டெலிகாம் நிறுவனங்களுமே தத்தம் பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.249 திட்டத்தை நீக்கிவிட்டன.
ஆக ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வேறு வழியே இல்லை, இனி விலை அதிகமான திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஏஆர்பியு (ARPU) உயரும். அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருமானம் உயரும். இதைத்தான் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் மறைமுகமான விலை உயர்வு இரு குறிப்பிட்டேன்.

இதற்கிடையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலைகள் நேரடியாக (Postpaid Plans Tariff Hike) உயரத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது வழக்கமாக சுமார் 2 ஆண்டுகளில் கட்டணங்களை முழுமையாக உயர்த்தியுள்ளன; இங்கும் அங்கும் சிறிய மாற்றங்களையாவது செய்து கொண்டே இருக்கின்றன!
இதன் பொருள், அடுத்த விலை உயர்வு 2026 ஆம் ஆண்டில் ஏதாவது ஒரு மாதத்தில் அல்லது காலாண்டில் நடக்கலாம். நினைவூட்டும் வண்ணம் கடைசி விலை உயர்வு ஜூலை 2024 இல் அமலுக்கு வந்தது. அது மிகவும் மோசமான (அதிகப்படியான) விலை உயர்வாக இருந்தது. ஜியோ, ஏர்டெல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.
மலிவு விலை திட்டங்களை கொண்டுள்ளதால், மக்கள் கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல் சேவைக்குள் நுழையும் அளவிற்கு விலை உயர்வு இருந்தது. அந்த சூழ்நிலை மீண்டும் வராமல் இருக்கவே தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ப்ரீபெய்ட் சேவையின் மீது நேரடி விலை உய்ரவை அறிவிக்காமல் மறைமுகமான விலை உயர்வை அறிவித்துள்ளது.
ஆக இப்போதைக்கு ப்ரீபெய்ட் விலை உயர்வு முடிந்துவிட்டது, அடுத்தது போஸ்ட்பெயிட்தான் என்று யூகிப்பதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறன். ஏனென்றால் ஏர்டெல்லுக்கு - ஒரு பயனருக்கான சராசரி வருவாய் - இலக்கு ரூ.300 ஆக உள்ளது. ஜியோவைப் பொறுத்தவரை இதுபோன்ற அறிவிக்கப்பட்ட இலக்கு எதுவும் இல்லை.
ஆனால் உள்ளுக்குள் ஜியோவும் ஒரு "எண்ணை" வைத்து இருக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான யோசனை இப்போது முழுக்க முழுக்க "லாபத்தை" மேம்படுத்துவத்தில் மட்டுமே உள்ளது. ஏனென்றால் இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை கொண்டு செல்ல அவர்கள் ஏற்கனவே "டன் கணக்கில்" பணத்தை செலவிட்டுள்ளனர். ஆக விலை உயர்விற்கான அடுத்த குறி - போஸ்ட்பெய்ட் திட்டங்களாக இருக்க வாய்ப்புள்ளது!
ரூ.249-ஐ நீக்கிய பின்னர் இனி ரிலையன்ஸ் ஜியோவின் பேஸிக் ரீசார்ஜ் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது இனிமேல் ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இல்லை. இதற்கு அடுத்தபடியாக ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 2ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
ரூ.249-ஐ நீக்கிய பின்னர் இனி பார்தி ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவை போலவே இனி ஏர்டெல்லின் கீழும் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இருக்காது. இதற்கு அடுத்தபடியாக ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது மொத்தம் 50ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








