பேஸ்புக்கில் போட்டோ போஸ்ட் செய்வது இஸ்லாம் மரபுக்கு புரம்பானதா!!!
பேஸ்புக்கில் போட்டோ போஸ்ட் செய்வது பற்றி முரண்பாடான கருத்துக்கள் வருகின்றன. லக்னோவை சேர்ந்த இஸ்லாம் மத குருமார்கள் பேஸ்புக்கில் போட்டோ போஸ்ட் செய்வது இஸ்லாம் மரபுக்கு புரம்பானது என சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் இது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கம், சரியான காரணங்களுக்காக போட்டோ போஸ்ட் செய்வது தவறல்ல. தவறான காரணங்களுக்காகதான் இதை பயன்படுத்தக்கூடாது எனக் கூறுகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நிறைய குற்றங்கள் நடக்கின்றன. இது போன்று போட்டோக்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வது குற்றத்திற்க்கு வழி வகுக்கும் என அபுல் இர்பான் நைமுல் ஹலிம் பிராஹனி மஹலி என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இப்படி இஸ்லாம் பெண்கள் போட்டோக்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வது தங்கள் மதத்தை அவமதிப்பதாகும் என அவர் கூறினார்.
சரியான காரணங்களுக்காக போட்டோ போஸ்ட் செய்வது தவறல்ல. உதாரணமாக பெண்களின் கல்யாணம் விஷியமாக போட்டோக்களை போஸ்ட் செய்வது தவறல்ல என்று அலி நாசிர் சையத் அபாக்த்தி அலியாஸ் அஹா ரூஹி என்பவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications