ஃபேஸ்புக் : உஷார் நிலை..!

Posted By:

உள்ளூர் வாசியான நம்மை அமெரிக்கா, ஆப்பிரிக்கா வரை உலவ விடுவது எது..? நம்ம போட்டோவையும் 'மாங்கு மாங்கு'னு மக்கள் விரும்புறாங்களேனு, நம்மள கண்ணு கலங்க வைக்குறதது எது..? - வேற எது..? - அது ஃபேஸ்புக் தான். இப்படி அங்காளி பங்காளியாக ஃபேஸ் புக் நம்மோடு இணைந்து விட்ட நிலையில் நாம் சில விடயங்களை மறந்து போகின்றோம், அது வேறொன்றும் இல்லை - பாதுகாப்பு..!

ஆணும் பெண்ணும் சமம் - "ஆமாம் சாமி" சொன்ன ஃபேஸ்புக்..!

ஃபேஸ்புக் : உஷார் நிலை..!

ஆம் ஃபேஸ்புக் ஒரு மாபெரும் சமூக வலைதளம் என்பதை மறந்து, அது என்னவோ நமக்கு மிகவும் நெருங்கியவர்களின் தளம் போல் நாம் பழகி கொண்டிருக்கிறோம். முக்கியமாக உங்களை பற்றிய சொந்த அல்லது ரகசிய தகவல்களை பதிவு செய்து வைத்திருப்பது. அது எவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிய வேண்டும்.

ஃபேஸ்புக் : உஷார் நிலை..!

அதாவது ஃபேஸ்புக்கில் உங்களை பற்றிய அதிகப்படியான தகவலை கொடுப்பதால் நீங்கள் அதிகப்படியான நம்பிக்கையை பெறுவீர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்களைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமான ரகசியமான தகவலை பகிர்ந்து கொள்கிறீர்களே அவ்வளவு அதிகம் 'ரிஸ்க்' என்று கூறியுள்ளது ஒரு ஆய்வு.

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

ஃபேஸ்புக் : உஷார் நிலை..!

ஃபேஸ்புக்கை பொருத்த வரை உரிமை இல்லாதவர்கள் கூட உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியும். நம்மில் பெரும்பாலானோர்கள் ஃபேஸ்புக்கின் ப்ரைவசி செட்டிங்ஸ் மீது அதிக கவனமும், அதிக அறிவும் கொள்ளாமலேயே ஃபேஸ்புக்கை அளவுக்கு அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது..!

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

ஃபேஸ்புக் : உஷார் நிலை..!

மேலும் திருடப்படும் அல்லது கைப்பற்றப்படும் உங்கள் ரகசிய தகவல்களை விலைக்கு விற்க்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. குறிப்பாக தொலைபேசி எண், பெயர், புகைப்படங்கள், விலாசம், படிப்பு விவரம் போன்றவைகள் அதிகம் திருடப்படுகின்றனவாம். உஷார் மக்களே..!

English summary
Posting Phone Numbers on Facebook Helps Criminals "Harvest" Personal Details
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot