பல்பு வாங்கிய லேட்டஸ்ட் iPhone மாடல்.. Production-ஐ நிறுத்திய Apple நிறுவனம்.. ஏன் இதை யாரும் வாங்கல?
கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் ஐபோன் மாடலின் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. அதாவது "ஏகபோக எதிர்பார்ப்புடன்" தான் அறிமுகம் செய்த புதிய ஐபோன் மாடல் ஆனது "பல்பு வாங்கி விட்டது" என்பதை ஆப்பிள் நிறுவனமே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது. என்ன மாடல்? அதை வாங்க பலரும் ஆர்வம் காட்டாதது ஏன்?
ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் அல்ட்ரா ஸ்லிம் ஐபோன் மாடல் ஆன ஐபோன் ஏர் (iPhone Air) மாடலின் ப்ரொடெக்ஷனை தான் குறைத்துள்ளது. ஐபோன் எக்ஸ் (iPhone X) அளவிற்கு ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய ஐபோன் ஏர் மாடலானது - பல ஜெனரேஷன்கள் மற்றும் பல இட்டிரேஷன்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் ஐபோன் எக்ஸ் மாடலை போல ஐபோன் ஏர் மாடலானது - பெரும்பாலான பயனர்களை ஈர்க்கவில்லை; அடித்துபிடித்து வாங்கவும் ஆர்வம் காட்டவில்லை. இது "ஸ்லிம் ஆன ஐபோன்" என்கிற யோசனையை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. ஐபோன் ஏர் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்கு பிறகு தெரிந்த மந்தமான விற்பனையை தொடர்ந்து இப்போது உற்பத்தியை குறைக்கும் அளவிற்கு வந்துள்ளது.
ஐபோன் ஏர் மாடலின் புதிய தோற்றம் ஆனது அதோடு சேர்ந்து அறிமுகமான ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ப்ரோ சீரீஸில் இருந்து, அதை தனித்து நிற்க வைத்தது. நேர்த்தியான வடிவமைப்பு, 5.6 மிமீ ஸ்லிம் டிசைன் மற்றும் வெறும் 165 கிராம் மட்டுமே என்கிற எடை என் எல்லாம் சேர்ந்து ஐபோன் ஏர் மாடலை - ஒரு பிரமாதமான ஐபோன் ஆக காட்டின. இருப்பினும் ஐபோன் ஏர் மாடலை பலரும் வாங்கவில்லை.
காரணம் - ஐபோன் ஏர் மாடலின் அதிக விலை நிர்ணயம் தான். இந்தியாவில் ஐபோன் 17 மாடலின் விலை ரூ.82900 இல் தொடங்குகிறது. இதற்கிடையில், ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.1,19,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதை ஒப்பிடும்போது ஐபோன் 17 சீரிஸின் டிசைன் யாருடைய கண்களையும் மறைக்காது
மேலும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ள ஐபோன் ஏர் மாடல் ஆனது அதன் பின்புறத்தில் ஒரே ஒரு ப்ரைமரி கேமராவை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் ஐபோன் ஏர் மாடலின் பேட்டரி ஆனது "அல்ட்ரா ஸ்லிம் டிசைன்" காரணமாக ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் உள்ள பேட்டரியை விட சிறியது. மேலும் இதன் சிங்கிள் ஸ்பீக்கர் திடமான ஒலியை உருவாக்கவும் தவறுகிறது. ஆக எல்லாம் சேர்ந்து ஐபோன் ஏர் மாடலின் விற்பனையை "கதம் கதம்" செய்து விட்டன.
ஐபோன் 17 ஏர் மாடலின் முக்கிய அம்சங்கள்: - 6.5 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது- 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது - பயன்பாட்டை பொறுத்து 10-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்களுக்கு இடையில் இயங்கும் - முன் மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷன்
- ஆப்பிள் ஏ19 ப்ரோ சிப்செட் - ஆப்பிளின் புதிய என்1 சிப்பையும் கொண்டுள்ளது, இது வைஃபை 6, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் திறன்களை இயக்குகிறது. - சிங்கிள் 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைமரி கேமரா (சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஆதரவு) - 18 மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் செல்பீ கேமரா - சிங்கிள் சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.


Click it and Unblock the Notifications








