தியேட்டர் லெவலில் அலறவிடும் சவுண்ட்பார் வெறும் ரூ.5000 தானா? குறுகிய கால சலுகை முந்துங்கள்!
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக போர்ட்ரானிக்ஸ் பியோர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 (Portronics Pure Sound Pro X1) என்ற சவுண்ட்பார் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் அசல் விலை ரூ.12,499 ஆகும். ஆனால், தற்போது ரூ.5000 விலை புள்ளியில் வாங்க கிடைக்கிறது.
Portronics Pure Sound Pro X1 வயர்லெஸ் சவுண்ட்பார் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சவுண்ட்பார் டீப் பேஸ் அம்சத்தை ஆதரிக்கும் தரமான சப்வூப்பர் உடன் வருகிறது. இது 3D ஸ்டீரியோ பாஸ் ஆப்டிமைஸ் சவுண்ட் அம்சத்துடன் வருகிறது. இது சினிமா அனுபவத்தை உயர் தரத்தில் வழங்குகிறது.

உங்கள் வீட்டை ஒரு குட்டி சினிமா தியேட்டர் போல மாற்றிவிடுகிறது. இந்த Portronics Pure Sound Pro X1 சவுண்ட் பாரில் HDMI இணைப்பு இல்லாத நிலையில், சவுண்ட்பார் மற்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இதை கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள். போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ X1 வயர்லெஸ் சவுண்ட்பார் சந்தையில் 12 மாத உத்தரவாதத்துடன்வருகிறது.
இந்த புதிய போர்ட்ரானிக்ஸ் பியோர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 சவுண்ட்பார் தற்போது வெறும் ரூ. 5,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 12,499 மட்டுமே. தற்போது அறிமுக கால சிறப்பு சலுகையாக, இந்த சாதனத்தின் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய கால சிறப்பு சலுகை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
போர்ட்ரானிக்ஸ் பியோர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 சவுண்ட்பார் மீது விருப்பமுள்ள பயனர்கள் இந்த தயாரிப்பை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.portronics.com தளம் வழியாக வாங்கலாம். அல்லது Amazon, Flipkart மற்றும் பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாகவும் வாங்கலாம்.

போர்ட்ரானிக்ஸ் பியோர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 சவுண்ட்பார் ஆனது டைனமிக் பிராண்ட் பேஸிங் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இது 3D ஆடியோவை வழங்குகிறது. இது கேட்போருக்கு, தங்களைச் சுற்றிலும் இருந்து, அணைத்து பக்கங்களிலும் இருந்து ஆடியோ வருவது போல் உணர வைக்கிறது. இதன் 5.25' இன்ச் சப்வூப்பர் உடன் வருகிறது.
இது டீப் பேஸ் மற்றும் திரைப்படங்களுக்கான சக்திவாய்ந்த பேஸை துல்லியத்துடன் வழங்குகிறது என்று பிராண்ட் கூறுகிறது. இது 100 வாட்ஸ் ஆடியோ ஆற்றலை வழங்க கூடியது. மூவிஸ், மியூசிக் மற்றும் நியூஸ் என்று மூன்று இன்பில்ட் ஈக்குவலைசர் மோட்களுடன் இணைந்து வருகிறது. இந்த சவுண்ட்பார் அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.
புளூடூத், ஆப்டிகல் மற்றும் ஆக்ஸ் இன்புட் வழியாக உங்கள் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்புடன் இணைக்க இந்த சவுண்ட்பார் உங்களை அனுமதிக்கிறது. யூ.எஸ்.பி டிரைவ் (எம்பி3) ஆதரவுடன் தனித்தனி முறையில் தங்களுக்குப் பிடித்த டிராக்குகளை இயக்க அனுமதிக்கிறியாது. போர்ட்ரானிக்ஸ் பியோர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 சவுண்ட்பார் உடன் IR ரிமோட் கண்ட்ரோலும் வழங்கப்படுகிறது.
உங்கள் வீட்டிற்கு குறைந்த விலையில் ஒரு தரமான சவுண்ட்பார் சாதனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உங்கள் கைகள் உடனே இந்த போர்ட்ரானிக்ஸ் பியோர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 சவுண்ட்பார் சாதனத்தை கைப்பற்ற வேண்டும். முக்கிய குறிப்பு இந்த ரூ.5999 விலை குறுகிய கால சலுகையாக மட்டுமே கிடைக்கிறது. உடனே முந்துங்கள்.


Click it and Unblock the Notifications








