ஏழைக்கு ஏற்ற வேக்யூம் கிளீனர்.. வெறும் ரூ.1000 விலைக்கு இப்படி ஒரு சூப்பர் சாதனமா? வீட்டுக்கு ஒன்னு வேணும்..
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் இந்தியாவில் புதிதாக மோப்காப் வேக்யூம் கிளீனர் (Portronics Mopcop Vacuum Cleaner) என்ற புதிய மலிவு விலை வேக்யூம் கிளீனர் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் மூலம் போர்ட்ரோனிக்ஸ் வேக்யூம் கிளீனர் சந்தைக்குள் களமிறங்கியுள்ளது. இது மிகவும் குட்டி சைஸுடன், ஒரு கையடக்க வேக்யூம் கிளீனர் சாதனமாக வெளிவந்துள்ளது. இது மலிவான விலையில் எளிதில் கையாளக்கூடிய அமைப்பு காரணமாக சுத்தம் செய்யும் பணிகளை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக பணம் கொடுத்து பெரிய சைஸ் வேக்யூம் கிளீனர்களை வாங்க முடியாதவர்கள், இந்த மினி சைஸ் வேக்யூம் கிளீனரை வாங்கிக்கொள்ளலாம்.
கார் இன்டீரியர், கார்பெட், அப்ஹோல்ஸ்டரி மற்றும் கடினமான தளங்கள் உள்ளிட்ட பல்வேறு துப்புரவு வேலைகளுக்கு இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் மோப்காப் வேக்யூம் கிளீனர் மிகவும் சிறந்தது. இது ஒரு சக்திவாய்ந்த 8000Pa உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது. வெவ்வேறு பரப்புகளில் முழுமையான மற்றும் பயனுள்ள சுத்தம் செய்வதை உறுதி செய்கிறது. இந்த வேக்யூம் கிளீனரில் பல்வேறு துப்புரவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல மோட்கள் மற்றும் அட்டாச்மெண்ட்கள் வழங்கப்பட்டுளள்து.

கூடுதலாக, இது ஒரு உள்ளமைக்கப்பட்ட LED ஃப்ளாஷ்லைட்டைக் கொண்டுள்ளது. இது இருண்ட மூலைகள் மற்றும் இடங்களில் வெளிச்சத்துடன் சுத்தம் செய்ய அனுமதிக்கிறது. சுத்தம் செய்யும் போது எந்த இடத்திலும் தூசி மற்றும் அழுக்குகள் சுத்தமாக சுத்தம் செய்வதை இந்த LED லைட் விளக்குகள் உறுதி செய்கிறது. Mopcop இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் HEPA பில்டர் ஆகும்.
இந்த பில்டர், தூசி மற்றும் ஒவ்வாமைப் பொருட்களைப் பிடித்து, காற்றில் மறுசுழற்சி செய்வதைத் தடுக்கிறது. குறிப்பாக, சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தமால் இது பாதுகாப்பாக வீட்டை சுத்தம் செய்ய அனுமதிக்கிறது. HEPA பில்டர் கழட்டி சுத்தம் செய்யும் படி வருகிறது. இதை நீங்கள் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் பராமரிக்க எளிதாகவும் செய்கிறது.
இந்த சாதனம் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியில் இயங்குகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் நீட்டிக்கப்பட்ட துப்புரவு அமர்வுகளை அனுமதிக்கிறது. இது கார் சார்ஜர்களுடன் இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. இது பயனர்களுக்கு கூடுதல் வசதியை சேர்க்கிறது. Portronics Mopcop ஐ அறிமுக விலையாக ரூ. 1399 என்ற விலையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.
கூடுதலாக, இது Amazon.in, Flipkart.com மற்றும் பிற முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களில் இன்று முதல் கிடைக்கிறது. இந்த வேக்யூம் கிளீனர் சாதனம் மிகவும் மலிவு விலை விருப்பமாக வெளிவந்துள்ளதால், இதன் விற்பனை இந்தியாவில் அட்டகாசமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டை சுத்தம் செய்ய, மிகவும் குறைந்த விலையில் ஒரு புதன் புது வேக்யூம் கிளீனரை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இது தான் சரியான தேர்வு.


Click it and Unblock the Notifications