போர்ட்ரானிக்ஸ் வழங்கும் புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் II-ன் விலை

By Siva
|

இந்திய நிறுவனமான போர்ட்ரானிக்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள லைட்வெயிட் ஹெட்போன் புளூடூத்4.1 திறன் கொண்டதாகவும், இசை கேட்பதற்கும், போன் அழைப்புக்கும் என இரண்டு விதங்களில் பயன்படுகிறது. புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் II இனிய இசையை தரத்துடன் கேட்க உதவுவது மட்டுமின்றி சிவிசி என்னும் நாய்ஸ் இல்லாத டெக்னாலஜியையும் கொண்டுள்ளது

புதிய புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் II

இந்த ஹெட்போனின் டிசைனை பார்த்தோம் என்றால் நல்ல தரமான லெதரால் ஃபினிஷிங் செய்யப்பட்டு ஸ்டைலிஷ் லுக்கில் அமைந்துள்ளது. கருப்பு நிறத்தில் அமைந்துள்ள இந்த புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் IIன் விலை ரூ.1999 மட்டுமே. இந்த உபகரணம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் கிடைக்கும்.

மேலும் இதில் உள்ள சிஎஸ்ஆர் என்ற டெக்னாலஜி போன் அழைப்பு வரும்போது எந்தவித இடையூறான சப்தங்கள் இன்றி போன் பேசுபவர்களின் குரல் தெளிவாக கேட்கும் தன்மையை கொண்டது

புளூடூத் V4.1 கனெக்டிவிட்டி கொண்ட இந்த புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் II ஹெட்போன் ஒரே நேரத்தில் இரண்டு போனை உபயோகப்படுத்தவும் உதவும். இதன் மூலம் கால் அழைப்பை ஒருபுறம் கேட்டுக்கொண்டே இன்னொரு புறம் போனை தொடாமல் அதன் வால்யூமை தேவைக்கேற்றபடி கண்ட்ரோல் செய்யலாம்.

வோடபோன் அறிவித்துள்ள புதிய கேஷ்பேக் சலுகைகள் மற்றும் அதன் விவரங்கள்.!வோடபோன் அறிவித்துள்ள புதிய கேஷ்பேக் சலுகைகள் மற்றும் அதன் விவரங்கள்.!

மேலும் இந்த புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் II ஹெட்போனில் உறுதியான வயர்கள் இருப்பதால் அறுந்துவிடும் ஆபத்து இல்லை. அதே சமயம் காதுக்குள் சுகமாக வலியில்லாமல் வைக்கும் அளவுக்கு வசதியான டிசைன் உள்ளது.

மிகவும் லேசான முறையில் காதில் வைத்தால் போதும், அந்த பக்கம் பேசுபவரின் குரல் மிக தெளிவாக கேட்கும்.. இசை கேட்டுக்கொண்டிருக்கும்போது போன் அழைப்பு வந்தால் எளிதாக ஒரு பட்டனை அழுத்தி அழைப்பை அட்டெண்ட் செய்யலாம். அதேபோல் அழைப்பு பேசி முடிந்தவுடன் ஒரே ஒரு சிங்கிள் பட்டனை அமுக்குவதால் மீண்டும் இசைக்கு மாறிவிடலாம்.

மேலும் இந்த புளூடுத் ஹெட்போனில் வாய்ஸ் குரல் மூலம் ஒருவரை போன் அழைப்பு செய்யலாம். போனை ஓப்பன் செய்து அழைக்க வேண்டியவரை குரலில் தெரிவித்தால் போதும், தானாகவே அந்த நபருக்கு அழைப்பு சென்றுவிடும்.

இந்த புளூடூத் 4.1 ஹெட்போன் ஹார்போனிக்ஸ் க்ளிப் II ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஹெட்போன் 100mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளதால், சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து அழைப்புகளை பேசலாம் மற்றும் சுமார் 7 மணி நேரம் இசை கேட்கலாம்.

எதுவுமே செய்யவில்லை என்றால் 120 மணி நேரம் சார்ஜ் நிற்கும் தன்மை உடையது. அதேபோல் இரண்டே மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிடலாம். இந்த ஹெட்செட்டில் லீ-பாலிமர் பேட்டரி உள்ளது. மேலும் இந்த புளூடூத்தை 10 மீட்டர் தொலைவில் இருந்து ஆபரேட் செய்யலாம்

Best Mobiles in India

English summary
Harmonics Klip II comes with a voice calling feature for easy dial-out by just pressing the button and speaking the name.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X