Home
News

சும்மா கிழி.. 200W சவுண்ட்.. 1 தெருவுக்கே இந்த 1 ஸ்பீக்கர் போதுமே.. மைக் உடன் Portronics Iron Beats III விலை?

போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் அதன் பார்ட்டி ஸ்பீக்கர்களின் வரிசையில் புதிய மாடலாக ப்ரோட்ரோனிக்ஸ் ஐயன் பீட்ஸ் III (Portronics Iron Beats III) என்ற புதிய ஸ்பீக்கர் மாடலை இலவச கரோக்கீ மைக் உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் படுமாஸான 200 வாட் சவுண்ட் அவுட்புட் திறனுடன் மற்றும் டீப் பேஸ் அம்சத்தை ஆதரிக்கும் ஒரு பவர்புல் பார்ட்டி ஸ்பீக்கராக வெளிவந்துள்ளது. இந்த புதிய Portronics Iron Beats III மாடலின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.

வேர் இஸ் தி பார்ட்டி.. அட எங்கவூட்ல பார்ட்டி.. என்ற பாடல் வரிகள் போல, இனி உங்கள் வீட்டிலேயே பார்ட்டி செய்ய இந்த ஒரு Portronics Iron Beats III ஸ்பீக்கர் மட்டும் இருந்தால் போதும். 200W சவுண்ட் திறனுடன் சும்மா கிழி என்று ஆர்ப்பரிக்கும் ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க இந்த போர்ட்ரோனிக்ஸ் பார்ட்டி ஸ்பீக்கர் மட்டும் போதுமானது மக்களே.

சும்மா கிழி.. 200W சவுண்ட்.. 1 தெருவுக்கே இந்த 1 ஸ்பீக்கர் போதுமே..

சும்மா கிழி.. 200W சவுண்ட்.. 1 தெருவுக்கே இந்த 1 ஸ்பீக்கர் போதுமே:

இது பார்ட்டி செய்பவர்களுக்கு இம்மர்சிவ் ஆடியோ அனுபவத்தை உறுதி செய்கிறது. இது பல்வேறு விதமான ஈக்வலைசர் செட்டிங்ஸ்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் விருப்பப்படி சவுண்டை அடஜஸ்ட் செய்து அவர்களுக்கு பிடித்தமான மோடில் வைத்து பார்ட்டி செய்யலாம். இந்த Portronics Iron Beats III ஸ்பீக்கரில் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சவுண்ட் அனுபவத்திற்காக பேஸ் மற்றும் ட்ரெபிள் அளவுகளை மாற்ற நிறுவனம் அனுமதிக்கிறது.

போர்ட்ரோனிக்ஸ் ஐயன் பீட்ஸ் III பார்ட்டி ஸ்பீக்கர் சக்திவாய்ந்த ஆடியோ மட்டுமல்லாமல், இது ஸ்பீக்கரின் முகப்பில் முழு டிஸ்பிளே RGB LED லைட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த RGD LED டிஸ்ப்ளே மூலம் ஒரு முழுமையான பார்ட்டி அனுபவத்தை ஒரு அறைக்குள் நீங்கள் உருவாக்க முடியும். இந்த LED லைட்களையும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்.

ப்ரோட்ரோனிக்ஸ் ஐயன் பீட்ஸ் III ஸ்பீக்கர் (Portronics Iron Beats III Speaker):

இது மியூசிக்கிற்கு ஏற்றார் போல அசைந்து பார்ட்டி மூடை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. இத்துடன் போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் வயர்லெஸ் UHF கரோக்கி மைக்ரோஃபோனை சேர்த்து இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் காரோக்கி மியூசிகளுக்கு உங்கள் சொந்த குரலில் பாடி மகிழும் வாய்ப்பையும் இந்த ஸ்பீக்கர் சாதனம் உருவாக்கி தருகிறது.

உங்கள் இசை திறமையை வெளிப்படுத்தி மற்றவர்களை உங்கள் இசை மழையில் நனைய வைப்பதற்கு இந்த Portronics Iron Beats III ஸ்பீக்கர் ஒரு சிறந்த சாதனமாகும். நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் கூட தங்களுக்கு பிடித்த பாடலை பாடி மகிழலாம். இந்த புதிய Portronics Iron Beats III சாதனம் ஒரே சார்ஜில் 4 மணி நேரம் வரை பிளேடைம் நேரத்தை வழங்குகிறது.

ப்ரோட்ரோனிக்ஸ் ஐயன் பீட்ஸ் III விலை (Portronics Iron Beats III Price):

போர்ட்ரோனிக்ஸ் ஐயன் பீட்ஸ் III சாதனம் புளூடூத், USB, TF கார்டு, ஆக்ஸ்-இன் மற்றும் FM ரேடியோ போன்ற அம்சங்களுடன் இணைந்து வேலை செய்கிறது. இந்த ஸ்பீக்கரை கட்டுப்படுத்த உங்களுக்கு தனிப்பட்ட ரிமோட் கண்ட்ரோலரையும் போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்பீக்கர் ஆடியோ மட்டுமின்றி LED லைட் கண்ட்ரோல் போன்ற பல விஷயங்களை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

Portronics Iron Beats III ஸ்பீக்கர் சாதனம் இந்திய சந்தையில் இந்த சாதனம் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும். இது Portronics.com, Amazon.in, Flipkart.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Iron Beats III Speaker 200W Sound Output With Wireless UHF Karaoke MIC Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X