அலறுது ஆஃபர்.. கம்மி செலவில் உங்க வீட்டுக்கு 150 இன்ச் குட்டி தியேட்டர் ரெடி.. கேபிள் டிவி கூட பார்க்கலாமா?
இன்னுமா உங்க வீட்ல சின்ன டப்பா சைஸ் டிவியில படம் பார்க்கறீங்க.. உடனே அமேசான் (Amazon) தளம் அல்லது பிளிப்கார்ட் (Flipkar) தளம் வழியாக சலுகை விலையில் வாங்க கிடைக்கும் இந்த புதிய ப்ரொஜெக்டர் சாதனத்தை ஆர்டர் போடுங்க. ரூ. 10,000 கூட செலவில்லாமல் உடனே உங்கள் வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர் செட்டப்பை உருவாக்க இது தான் அருமையான சான்ஸ் மக்களே. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 450 ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 Projector) மொபைல், லேப்டாப், செட்-டாப்-பாக்ஸ், கேமிங் கன்சோல் என்று எல்லாவற்றிலும் இணையக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனம் தனது புதிய லேசர் ஒளிப்படக் கருவியான போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 என்ற ப்ரொஜெக்டர் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி ஒரு முழு HD LED ப்ரொஜெக்டர் சாதனமாக மிகவும் துல்லியமான வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 450 1080P ஸ்மார்ட் LED ப்ரொஜெக்டர் 4000 லூமன்ஸ் பிரகாசத்துடன் உயர்தர காட்சிகளை வழங்குகிறது.

இந்த ப்ரொஜெக்டரின் சிறப்பம்சமே, இது 40" இன்ச் முதல் 150" இன்ச் அளவு வரை மிகவும் துல்லியமான கிரிஸ்டல் கிளியர் வீடியோவை ப்ரொஜெக்ட் செய்கிறது. உங்கள் வீட்டில் சிறிய சுவர் இருந்தாலும் சரி, பெரிய சுவர் இருந்தாலும் சரி, அதில் இனி உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை பெரிய அளவில் ப்ரொஜெக்ட் செய்து கண்டு மகிழ உங்களிடம் இந்த ப்ரொஜெக்டர் இருப்பது அவசியம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 450 ப்ரொஜெக்டர் சாதனம் பல திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1 முதல் 4 மீட்டர் தொலைவில் இருந்து படங்களை துல்லியமாக பிரதிபலிக்க செய்கிறது. இது 150" வரை விரிந்து ஒரு மினி தியேட்டரை அனுபவத்தை உங்களுக்கு வீட்டுக்குளேயே வழங்குகிறது. இந்த ப்ரொஜெக்டர் மூலம் OTT தள உள்ளடக்கங்கள், கேபிள் டிவி சேனல்கள் மற்றும் மொபைல் உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்க வகைகளை கண்டு மகிழ அனுமதிக்கிறது.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 450 ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 Projector) கருவி டூயல்-பேண்ட் வைஃபை, ஈத்தர்நெட், புளூடூத் வயர்லெஸ் ஆடியோ மற்றும் 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆகிய அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, இது மேம்படுத்தப்பட்ட ஆடியோ விருப்பங்களுக்காக 3.5 மிமீ ஸ்டீரியோ ஜாக் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.
இந்த கருவி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Videos) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற பிரபலமான பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது. குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen mirroring) திறன்களுடன், பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களிலிருந்து பெரிய திரையில் உள்ளடக்கத்தை எளிதாக பார்க்க முடியும்.
ரிமோட் கண்ட்ரோல் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 450 LED ப்ரொஜெக்டர் சாதனம் ரூ. 13,449 என்ற அசல் விலையில் விற்பனைக்கு வந்தது. ஆனால், இப்போது சிறப்பு சலுகையில் ஒரு பகுதியாக இது இப்போது ரூ. 9899 என்ற மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. இது போர்ட்ரானிக்ஸ் வலைத்தளத்திலும், அமேசான், computechstore.in மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற முக்கிய தளங்களிலும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








