Smart TV-லாம் வேஸ்ட்.. 150" இன்ச் FHD LED டிஸ்பிளே.. டிவியை விட 3 மடங்கு மலிவு விலை.. புது Projector சேல்ஸ்..
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் இந்தியாவில் புதிதாக போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 (Portronics Beem 450) என்ற ப்ரொஜெக்டர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரொஜெக்டர் சாதனம் ஒரு முழு எச்டி குவாலிட்டி கொண்ட எல்இடி ப்ரொஜெக்டர் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சாதனத்தை போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 1080P ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 1080P Smart LED Projector) என்ற பெயருடன் இதன் விற்பனையை தற்போது இந்தியாவில் துவங்கியுள்ளது.
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 (Portronics Beem 450) ப்ரொஜெக்டர் சாதனத்தை FHD LED வயர்லெஸ் ப்ரொஜெக்டர் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 4000 லுமென்ஸ் லென்ஸ் உடன் மிகவும் துல்லியமான மற்றும் பிரைட்டான வீடியோவை வழங்குகிறது. இது 40" இன்ச் முதல் 150" இன்ச் வரையிலான டிஸ்பிளே அளவு வரை வழங்குகிறது.

போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 1080P ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 1080P Smart LED Projector):
இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 1080P ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 1080P Smart LED Projector) சாதனம் 1.2 மீட்டர் முதல் 4 மீட்டர் தூரம் வரை சுவரில் 40" இன்ச் முதல் 150" இன்ச் அளவு வரை பிரதிபலிக்கும் திறன் உடையது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் 1080P குவாலிட்டியில் 150" இன்ச் வரை வீடியோவை வழங்குகிறது.
இதனால், பெரிய திரையிலும் கூட உங்களால் கிரிஸ்டல் கிளியர் வீடியோ காட்சிகளை பார்க்க முடியும் என்று போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ப்ரொஜெக்டர் சாதனத்தை பயன்படுத்தி நீங்கள் கேமிங், OTT நிகழ்ச்சிகள், கேபிள் டிவி சேனல்கள் மற்றும் மொபைல் அடக்கங்களை பெரிய திரையில் உங்கள் விருப்பம் போல பார்த்து மகிழலாம். இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 (Portronics Beem 450) ப்ரொஜெக்டர் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுடன் வருகிறது.
இதன் மூலம் இந்த ப்ரொஜெக்டரை நீங்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சுலபமானது. இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 1080P ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 1080P Smart LED Projector) டிவைஸ் டூயல் பேண்ட் வைஃபை ஆதரவு, ஈதர்நெட், ப்ளூடூத் வயர்லெஸ் ஆடியோ, 5W கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 3.5 ஸ்டீரியோ ஜாக் அம்சமும் இடம்பெறுகிறது.
போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 விலை (Portronics Beem 450 Price):
இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 (Portronics Beem 450) ப்ரொஜெக்டர் சாதனம் ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்துடன் வருகிறது. இது டிஸ்னி+ ஹார்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோஸ் மற்றும் யூடியூப் போன்ற ஆப்ஸ்களின் ஆதரவை கொண்டுள்ளது. இதில் குரோம்காஸ்ட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் அம்சமத்துடன் வருகிறது. இதன் மூலம் மொபைல் உள்ளடக்கங்களில் உள்ள வீடியோக்களை நீங்கள் பெரிய டிஸ்பிளேவில் பிரதிபலிக்கும்.
இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 450 1080P ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 450 1080P Smart LED Projector) சாதனம் 1 வருட உத்தரவாதத்துடன் ரூ. 13,449 விலையில் விற்பனைக்கு வருகிறது. இது போர்ட்ரோனிக்ஸ் இணையதளம் மற்றும் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








