லட்டு மாதிரி ஆஃபர்.. டிவியே வேண்டாம்.. வெறும் ரூ.13,988க்கு எல்இடி புரொஜெக்டர்.. விட்டா கிடைக்காது!
ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டிவியில் கொடுக்கப்படும் அம்சங்களுடன் வெறும் ரூ.14 ஆயிரம் பட்ஜெட்டில் போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனத்தின் பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் (Beem 410 Smart Android Projector) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
நம்மில் பலருக்கு தியோட்டர் எஃபெக்ட்டில் வீடியோ பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால், புரொஜெக்டர் (Projector) ஒன்றை வாங்கி வீட்டில் வைக்க திட்டம் போட்டிருப்போம். ஆனால், நல்ல தரமான கம்பெனி புரொஜெக்டரின் விலை ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதனால், கம்மி விலையில் கிடைக்கும் புரொஜெக்டரை வாங்கி இருப்போம். ஆனால், அதில் குவாலிட்டியாக வீடியோ தெரிந்திருக்காது.

அதேபோல நீண்ட நாட்களும் அது உழைத்திருக்காது. இதனால், நல்ல ஆஃபர் வரும் வரை காத்திருந்து கூட கம்பெனி புரொஜெக்டர் வாங்க பலர் திட்டம் போட்டிருப்பார்கள். இவர்களுக்காகவே ரூ.34,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர், இப்போது, சலுகை விலையில் ரூ.13,988 க்கு கிடைக்கிறது.
இந்த விலை அறிமுக சலுகையாகும் என்பதால் விரைவில் அதிகரிக்கக்கூடும். ஆகவே, வாங்க விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டரில் என்னென்ன அம்சங்கள் வருகின்றன, எப்போது விற்பனைக்கு கிடைக்கும், எங்கு ஆர்டர் செய்ய வேண்டும், சலுகையை பெறுவது எப்படி, உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் அம்சங்கள் (Beem 410 Smart Android Projector Specifications): இதுவொரு எல்இடி (LED) ஸ்மார்ட் புரொஜெக்டராகும். இந்த புரொஜெக்டரில் 1080p எச்டி ரெசொலூஷன், 3600 லூமென்ஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) கொடுக்கப்பட்டுள்ளது.
16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) வருகிறது. 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளது. 6W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் உள்ளது. இந்த புரொஜெக்டரில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பென்டிரைவ் சப்போர்ட் உள்ளது. டூயல் பேண்ட் வை - பை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) உள்ளது. ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் (Android 9 OS) கொண்டிருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வருகிறது. மொத்தமாக 1.39 கிலோ எடைக் கொண்டுள்ளது.
இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. ஒரு வருட வாரண்ட்டி கொடுக்கப்படுகிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் புரொஜெக்டரின் விலை ரூ.34,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது, அறிமுக சலுகையாக ரூ.16,999 க்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் அமேசான் (Amazon) தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது.
அந்த வகையில், ரூ.13,988 க்கு இந்த ஸ்மார்ட் புரொஜெக்டரை வாங்கிக் கொள்ள முடியும். அதே போல போர்ட்ரானிக்ஸ் தளத்திலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்திலும் இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டரை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். சிலர், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிக்கு நிகரான அம்சங்களை கொண்ட புரொஜெக்டர் வாங்க திட்டம் போட்டிருப்பார்கள்.
அவர்கள், இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டரை வாங்கிக் கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








